முகப்பு /புதுக்கோட்டை /

மண்வளம் செழிக்க வேண்டி புதுக்கோட்டையில் முளைப்பாரி எடுத்து வழிபட்ட பெண்கள்! 

மண்வளம் செழிக்க வேண்டி புதுக்கோட்டையில் முளைப்பாரி எடுத்து வழிபட்ட பெண்கள்! 

X
முளைப்பாரி

முளைப்பாரி எடுத்து வழிப்பட்ட பெண்கள்

Kallalankudi Mariyamman Temple : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கல்லாலங்குடி மாரியம்மன் கோவிலுக்கு மஞ்சள் உடையணிந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்தனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள கல்லாலங்குடி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த சித்திரைத் திருவிழாவை ஒட்டி ஆலங்குடி பேரூராண்டார் திருக்கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மஞ்சள் உடையணிந்து தங்கள் வீட்டுல் நவதானியங்கள் வைத்து பூஜை செய்து வளர்க்கப்பட்ட முளைப்பாரியை மண் வளம் செழிக்க வேண்டியும், விவசாயம் பெருக வேண்டியும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

முளைப்பாரி எடுத்து வழிப்பட்ட பெண்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், அவர்கள் கொண்டு வந்த முளைப்பாரியை கல்லாலங்குடி மாரியம்மன் கோவிலின் முன்னர் வைத்து வழிபட்டனர்.

First published:

Tags: Local News, Pudukkottai