Home /pudukkottai /

புதுக்கோட்டையில் பள்ளி மாணவிகளுக்கு இடையிலான கபடிப் போட்டி

புதுக்கோட்டையில் பள்ளி மாணவிகளுக்கு இடையிலான கபடிப் போட்டி

புதுக்கோட்டை கபடி போட்டி

புதுக்கோட்டை கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலங்குடி குறுவட்ட அளவிளான பெண்களுக்கு இடையேயான கபாடிப் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவிகள் அணிகளாக தங்களுக்குள் மோதிக் கொண்டனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Alangudi, India
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆலங்குடி குறுவட்ட அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றன.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பன்னீர்தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய ஆலங்குடி குறுவட்ட அளவிலான 17 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.

    கபடி போட்டியில் மாணவிகள்


    கபடி போட்டியை பன்னீர் தேவர் கல்வி நினைவு அறக்கட்டளை கருப்பையா தொடங்கி வைத்தார். கபடி போட்டியில் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமணஞ்சேரி அரசுப் பள்ளி, அம்புக்கோவில் அரசுப் பள்ளி, மழையூர், வெட்டண் விடுதி, ரெகுநாதபுரம், பல்லவராயன் பத்தை, மாஞ்சான் விடுதி மற்றும் பள்ளத்தி விடுதி பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

    மாணவிகளுக்கான பரிசுகள்


    விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர்.

    கபடி போட்டியில் பங்கேற்க காத்திருக்கும் மாணவிகள்


    உற்சாகமாக விளையாடிய மாணவிகள் ஒவ்வொரு புள்ளியையும் அதிரடியாகவும், அசாத்தியமாகவும் விளையாடி கைப்பற்றிச் சென்றனர். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் இப்போட்டிகள் கிராமப் புறங்களில் இருந்து விளையாட்டுத் துறையில் சாதிக்க துடிக்கும் மாணவிகளுக்கு உதவிகரமாக அமையும் என மாணவிகளின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இப்போட்டியில் பல பள்ளிகளில் இருந்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு மாணவிகளை உற்சாகப்படுத்தினர். கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

    செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி