விருச்சிகம் ராசி அன்பர்களே.. ஜூன் மாதம் முழுவதும் நிதானம் தேவை. எதிர்பாராத கடன்கள் ஏற்படும் படிப்பவர்களுக்கு மதிப்பெண் குறையும் அல்லது உடல் நலம் பிரச்சனை உண்டாகும் அதிமேதாவி தனத்தை காட்டி ஏமாந்து விடாதீர்கள்.
தந்தையின் நிலை சற்று மோசம் அடையும். ஆனால் வரவை மிஞ்சிய செலவும் ஏற்படும் . ஜூன் 15க்கு பிறகு வெப்ப சம்பந்தமான நோய்கள் தோன்றும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கும் சற்று தாமதமாகும் . தாய் வழியில் ஆதாயங்கள் உண்டு. தாய் மூலம் சில குடும்பப் பிரச்சனைகள் தீரும். காதல் சறுக்கும் .சில திருமணங்கள் ஜூன் 19ஆம் தேதிக்குப் பிறகு திடீரென்று முறிவு பெறும்.
சுப விரயங்கள் செய்யுங்கள் .உங்கள் பிரச்சினைகளில் அன்னியர் தலையிடுவதை தவிர்க்கவும் வேற்றுமையும் பாராட்டுவார்கள். துணைவர் நலனும் தொழில் அடைப்பும் சீராக செல்லும் . ஜூன் 13 ,14, 15ல் சிலரிடம் கடன் பெற நேரிடும். சில பொருட்கள் கை விட்டுப் போகும். சிலருக்கு புனித பயணங்கள் செல்ல வாய்ப்புகள் ஏற்படும். முருகன் வழிபாடு கந்த சஷ்டி விரதம் நல்ல பலன்களை தரும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Local News, Oracle Speaks, Pudukkottai, Rasi Palan, Religion18