ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் 17ம் தேதி ஜல்லிக்கட்டு - விழா ஏற்பாடுகள் தீவிரம்

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் 17ம் தேதி ஜல்லிக்கட்டு - விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 8ஆம் தேதி கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இத்தகைய ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடுத்த சில மாதங்கள் வரையில் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதி கிராமத்தில் மாயன் பெருமாள் கோவில் 63ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா வருகிற 17ஆம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வன்னியன் விடுதியில் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது உறுதியாகி உள்ள நிலையில், அங்கே வாடிவாசல் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனால் 63 ஆண்டுகளாக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு நடை பெற்று வந்த ஜல்லிக்கட்டு இந்தாண்டு புதிய வாடிவாசலில் நடைபெற உள்ளது.

ஜல்லிகட்டிற்கான ஏற்பாடுகளை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில் நாயகி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வாடிவாசல் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அப்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து போட்டிக்கு உறுதியளிப்பார்கள்.

Must Read : புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஹேப்பி பர்த்டே... 49ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது - சிறப்புகள் என்ன?

இந்நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்களும், போட்டிக்கு ரெடியாகி வருகின்றன. அத்துடன், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை புதிய வாடிவாசலுடன் பார்த்து ரசிக்க மக்களும் தயாராகி வருகின்றன.

First published:

Tags: Jallikattu, Local News, Pudukkottai