முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை பாப்பான்விடுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு! 

புதுக்கோட்டை பாப்பான்விடுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு! 

X
பாப்பான்விடுதியில்

பாப்பான்விடுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு

Pudukkottai Jallikattu : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்து முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி ஸ்ரீமுத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன்பின் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்குபுதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கு பெற்றனர்.

பாப்பான்விடுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு

மாடு பிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து காளைகளை அடக்கினர். மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மிக்சி, கிரைண்டர், சைக்கிள் என பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவின் ஏற்பாடுகளை பாப்பான்விடுதி கிராமத்தார்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Pudukkottai