ஹோம் /புதுக்கோட்டை /

குரூப்புல டூப்.. புதுக்கோட்டை கீரனூரில் கன்றுக் குட்டிகளை அடக்கிய காளையர்கள்...

குரூப்புல டூப்.. புதுக்கோட்டை கீரனூரில் கன்றுக் குட்டிகளை அடக்கிய காளையர்கள்...

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Jallikattu 2023 : புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில்  மாட்டுப் பொங்கலின் தொடர்ச்சியாக மாடுகளை ஊர்வலமாக அழைத்து அதற்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் செய்து மாடுகளை உற்சாகப்படுத்தினர். அப்போது விளையாட்டாக கன்று குட்டிகள் அவிழ்த்து விடப்பட்டன அதனையும் காளையர்கள் அடக்கினர்.   

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மாட்டுப் பொங்கலின் தொடர்ச்சியாக மாடுகளை ஊர்வலமாக அழைத்து அதற்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் செய்து மாடுகளை உற்சாகப்படுத்தினர். அப்போது விளையாட்டாக கன்று குட்டிகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனையும் காளையர்கள் அடக்கினர்.

மாட்டுப் பொங்கல் முன்னிட்டு கோவில் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டுக்காக வீட்டில் வளர்க்கப்படும் காளைகளை அலங்கரித்து அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து கீரனூரில் உள்ள பல கோவில்களுக்கு அவை அழைத்துச் செல்லப்படும்.

கோவில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அந்த பிரசாதத்தை ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் கோவில் காளைகளுக்கு வைத்து கும்பிட்டவுடன் பின் மீண்டும் கொங்கணி கருப்பர் ஆலயத்தில் மாடுகளை நிறுத்தி வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் சிறிய கொண்டாட்டமாக கன்று குட்டிகளை அவிழ்த்து அதனை விளையாட விடுவதும் மற்றும் மாடுபிடி வீரர்கள் அதனை பிடிப்பது போல விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவானது ஒரு பாரம்பரிய நிகழ்வாக வருடம் தோறும் இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

First published:

Tags: Jallikattu, Local News, Pudukkottai