முகப்பு /புதுக்கோட்டை /

நெகிழ்ச்சி அடைய செய்த பசுவின் தாய் பாசம்..! வியந்து பார்த்த புதுக்கோட்டை மக்கள்..!

நெகிழ்ச்சி அடைய செய்த பசுவின் தாய் பாசம்..! வியந்து பார்த்த புதுக்கோட்டை மக்கள்..!

X
நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி அடைய செய்த பசுவின் தாய் பாசம்

Pudukottai News : புதுக்கோட்டை நகர்ப்புறத்தில் சாலையோரங்களில் சுற்றித்திரிந்த பசுமாட்டின் தாய்ப்பாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை நகர்புறங்களில் பசு மாடுகள் சாலை ஓரங்களில் சுற்றி திரிவது வழக்கம். அதன்படி, நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் தனியாருக்கு சொந்தமான கால்நடைகள் சாலை ஓரங்களில் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன.

இவை வீட்டில் வளர்க்கப்படுபவைகள் என்றாலும், பெரும்பாலான நேரங்களில் நகர்புறத்திலும் சாலையோரங்களிலும் உள்ள புற்களை மேய்ந்து கொண்டு இரவிலும் சாலையோரங்களில் ஆங்காங்கே படுத்துவிடுகின்றன.

இதேபோல் புதுக்கோட்டை நகர்ப்புறத்தில் சாலையோரங்களில் சுற்றித்திரிந்தபசுமாடு ஒன்று கன்றினை ஈன்றது. அதன் பின்னர் தகவல் அறிந்து, அங்கு வந்த பசுவின் உரிமையாளர், கன்றினை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றார்.

அப்போது தாய் பசுவானது, சாலையில் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்படவிருந்த தன்னுடைய கன்றினை, அங்கிருந்து எடுத்துச் செல்ல விடாமல் இருசக்கர வாகனத்தின் பின்னரே சென்றும், வண்டியை சுற்றி வளைத்தும் தடுத்து நிறுத்தியது.

நெகிழ்ச்சி அடைய செய்த பசுவின் தாய் பாசம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பசுவின் இந்த தாய் பாசம், அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. பசுவின் இந்த பாச போராட்டத்தை அங்கிருந்தவர்கள் நீண்ட நேரமாக பார்த்து ரசித்தனர்.

First published:

Tags: Local News, Pudukkottai