முகப்பு /புதுக்கோட்டை /

”மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்” - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவுரை..

”மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்” - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவுரை..

X
மாதிரி

மாதிரி படம்

Pudukkottai News | புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்கள் தொடர்பான தெருமுனைப் பிரச்சார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வாகனத்தை மாவட்ட ஆட்சி தலைவர் கவிதா ராமு  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாற்றுதல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் எட்டு பயணாளர்களுக்கு தலா ரூபாய் 25 ,000 வீதம் ரு 2,00,000 வங்கிக்கடன் மற்றும் அரசு மானியம் ஆகியவை வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்கள் தொடர்பான தெருமுனைப் பிரச்சார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ”மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்து மற்றும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பெற்று இருத்தல் அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Pudukkottai