புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான் மலையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நெல் மற்றும் உளுந்து பயிருக்கு ட்ரோன் மூலம் இலைவழி உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
குடுமியான் மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய ஜெர்மன் திட்டம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் இணைந்து, நெல் பயிர் மற்றும் உளுந்துக்கு ட்ரோன் மூலம் இலைவழி ஊட்டச்சத்து தெளிப்பு குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது.
தற்போது நிலவும் ஆட்கள் பற்றாக்குறையாலும், சாகுபடி செலவு அதிகரிப்பதாலும் விவசாயிகளுடைய நிகர வருமானம் குறைந்துள்ளன. இதனை நிவர்த்தி செய்ய ட்ரோன் மூலம் இலைவழி மருந்து தெளிப்பதன் மூலம் வருமானத்தை பெருக்க புதிய திட்டம் அறிமுகம். புதிய தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் இலைவழி நுண்ணூட்டம் செலுத்தி விவசாயிகள் மற்றும் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் உளுந்திற்கும், நெல்லில் நானோ யூரியா மற்றும் எதிர் உயிர் கொல்லி கரைசல் தெளித்தும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பரம்பூர் பெரிய கண்மாய் பாசன பகுதியில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்கம் நடைபெற்றது.
ALSO READ | நெல் வயலில் மீன் வளர்ப்பு.. லட்சக்கணக்கில் லாபம்.. அசத்தும் புதுக்கோட்டை தம்பதி
மேலும் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி இணை பேராசிரியர் மாரிமுத்து விவசாயிகளுக்கு ட்ரோன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
ட்ரோன் தொழில் நுட்பமானது நெல், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, மற்றும் கரும்பு ஆகிய பயிர்களில் நானோ யூரியா TNAU பயிர் , மற்றும் பி.பி. எப்.ம் (இளஞ்சிவப்பு மெத்தலோ பாக்ட்டீரியம் ) தெளிப்பு பற்றிய செயல் விளக்கம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தியதோடு ட்ரோன் இயக்குவது பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக இதில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செயல் விளக்கம் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கல்லூரி முதன்மையர் S. நக்கீரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதனை புதுக்கோட்டை வேளாண் இயக்குநர் மா. பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் வேளாண்கல்லூரி பேராசிரியர்கள், அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குனர், கந்தர்வகோட்டை உதவி இயக்குனர் S. அன்பரசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் 75 பேரும் வேளாண் இளங்கலை மாணவர்கள் 180 பேரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Drone, Local News, Pudukkottai