முகப்பு /புதுக்கோட்டை /

விராலிமலை வாரச்சந்தையில் புதிய உச்சம் தொட்ட கறிவேப்பிலை விலை..

விராலிமலை வாரச்சந்தையில் புதிய உச்சம் தொட்ட கறிவேப்பிலை விலை..

X
விராலிமலை

விராலிமலை வாரச்சந்தை

Curry Leaves Price : விராலிமலை வாரச்சந்தையில் கறிவேப்பிலை திடீர் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கவலை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

மார்க்கெட்டில் காய்கறி வாங்கினால் இலவசமாக கொடுக்கும் கறிவேப்பிலை தற்போது ராக்கெட் வேகத்தில் விலையேறி உள்ளது. அதேபோல் தொடர் விலையேற்றத்தால் வரும் நாட்களில் கறிவேப்பிலை விலை புதிய உச்சத்தை அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ரூ.10க்கு விற்று வந்த கறிவேப்பிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கிலோ கறிவேப்பிலையின் விலை 80 ரூபாய் வரை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்த சந்தையிலேயே இந்த விலை என்றால் தினசரி காய்கறி கடைகளில் ரூ.120 முதல் ரூ.150 வரை செல்லலாம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கடும் பனிப்பொழிவால் கறிவேப்பிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு விளைச்சலை பாதித்து இலைகளை வளரவிடாமல் செய்கிறது. அதையும் மீறி விளையும் கறிவேப்பிலைகளின் இலைகள் பச்சை நிறத்தில் இருந்து கலர் மாறி பளுப்பு நிறத்தில் சமையலுக்கு உபயோகப்படுத்த முடியாத நிலையிலேயே வளர்ந்து வருகிறது. அதுபோன்று இருக்கும் கறிவேப்பிலை கட்டுகளை ஒதுக்கி விட்டு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சந்தைக்கு வந்துள்ள நல்ல கறிவேப்பிலை இலை கட்டுகளால் தான் இந்த விலை ஏற்றம் என்று கூறுகின்றனர். நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே செல்லும் இந்த சூழலில்எதிர்பாராத வகையில் இந்த பட்டியலில் கறிவேப்பிலையும் சேர்ந்துள்ளது.

First published:

Tags: Local News, Pudukkottai