ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் விற்பனை அமோகம்... 

புதுக்கோட்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் விற்பனை அமோகம்... 

X
கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் கேக்

Pudukkottai Christmas Cake Sale : புதுக்கோட்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் விற்பனை அமோகம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை வருடந்தோறும் டிசம்பர் 5 கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் அமைப்பது, வீட்டில் ஸ்டார் வைப்பது மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கேக்குகள் மேலும் இனிமையாக்குகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில், அனைவரும் கிறிஸ்துமஸ் கேக்குகளை விரும்புவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளம் கேக், புட்டிங் கேக், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக், பிளாக் பராஸ்ட், வெல்வெட், மற்றும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சிலுவை வடிவத்தில் ஆன கேக் என வகை வகையான கேக்குகள் பேக்கரிகளில் விற்பனை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்களுக்கு பிடித்த வகையான கேக்குகளை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக புதுக்கோட்டையின் பாரம்பரியமாக கிறிஸ்துமஸ் பிளம் கேக் மற்றும் புட்டிங் கேக் தயாரித்து விற்பனை செய்து வரும் மகாராஜ் பேக்கரிகளில் கூடுதலாக மக்கள் சென்று வாங்கி செல்கின்றனர்.

பிளம் கேக் அரை கிலோ 200 ரூபாய் முதல் ஒரு கிலோ 400 ரூபாய் என்ற விலைகளில் ஒவ்வொரு வகையான கேக் வெவ்வேறு விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்

First published:

Tags: Local News, Pudukkottai