பசுவிலிருந்து கிடைக்கும் 5 பொருட்களை கொண்டு எப்படி பஞ்சகவ்யம் செய்வது எப்படி என விராலிமலை விவசாயி விளக்கி கூறுகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் - மகேஸ்வரி தம்பதியினர் 5 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் காய்கறி வகைகள் ஆகிய அனைத்தையும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து இயற்கை விவசாயத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் பஞ்ச கவ்யம் செய்வது எப்படி என்று செய்முறை விளக்கம் அளிக்கின்றனர்.பசுவில் இருந்து கிடைக்கும் 5 பொருட்களான பால், தயிர் ,நெய், நாட்டு மாட்டு சாணம், கோமியம் ஆகியவை தான் அபிஷேக பொருளாகவும், ஆயுர்வேத வைத்தியத்தில் மருத்துவ பொருளாகவும் இயற்கை வேளாண்மையில் ஊட்ட பொருளாகவும் பயன்படுகிறது.
இந்த 5 பொருட்களுடன் நாட்டு சக்கரை, வாழைப்பழம், இளநீர், ஆகியவை தான் பஞ்சகவ்யம் செய்வதற்கு தேவையான பொருட்கள்.
நாட்டு மாட்டு சாணத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு நெய்யை ஊற்றி கலந்து வைக்க வேண்டும். அதன் பின்னர் நெய்யுடன் கலந்த சாணத்தை ஒரு பிளாஸ்டிக் பேரலில் போட்டு அதன் பின் கோமியம் இளநீர் நெய் பால் நாட்டு சக்கரை வாழைப்பழம் ஆகியவற்றையும் சேர்த்து வேப்பமரத்து குச்சியை பயன்படுத்திய அதனை நன்கு கலக்க வேண்டும் அதன் பின்னர் அதனை காற்று மற்றும் ஈக்கள் புகாதவாறு மூடி வைக்க வேண்டும். தொடர்ந்து 25 நாட்களுக்கு பஞ்சகவ்யத்தை ஒரு பக்கமாக கலக்கி விட வேண்டும். அதன் பின்னர் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.
அதனை அனைத்து விவசாய பயிர்களுக்கு பயன்படுத்தலாம். அதாவது அடி உரமாகவும் இடை வழி உரமாகவும் தெளிக்கலாம். 100 மில்லி பஞ்சகவ்யத்தில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து நாம் பயிர்களுக்கு பயன்படுத்தலாம் என்கிறார் மகேஸ்வரி.செயற்கை உரங்களை பயன்படுத்தி விளை பொருட்களையும் நஞ்சாக்காமல் பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் நோயற்ற வாழ்க்கையை நாம் வாழலாம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Pudukkottai