இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், பெண்களின் முன்னேற்றம் ஜாதி மறுப்பு சமூக சீர்திருத்தம் விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் பங்களிப்பு செய்தவர். புதுக்கோட்டையில் பிறந்து இருந்தாலும் சென்னை மாகாண சபை வரை தன் இடத்தை உயர்த்தியவர். தேவதாசி முறை ஒழிப்பு அடையார் புற்றுநோய் மருத்துவமனை என அவரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அவரின் நினைவை போற்றும் விதமாக இவரது பெயரில் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு பேருக்கால நிதி உதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது. 1989 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலம் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் நிதி உதவி தொகையாக ரூபாய் 18000 வழங்கப்படும். இதன் மூலம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க முடியும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்து தவணைகளாக இந்த 18 ஆயிரம் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் நான்காயிரம் ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் வழங்கப்படுகிறது.
முதல் தவணை
இந்த திட்டத்தில் கர்ப்பமுற்ற பெண்கள் 12 வாரத்திற்குள் கிராம நகர சுகாதார செவிலியர் இடம் பதிவு செய்து பிக்மி என்ற எண்ணை பெற வேண்டும். இந்த எண்ணை பெற்றவுடன் 2000 ரூபாய் தொகையை பெறலாம். மூன்றாம் மாத இறுதியும் ஊட்டச்சத்து பெட்டகத்தையும் பெற வேண்டும் அதற்கு பின்னர் 2000 ரூபாய் தரப்படும்.
இரண்டாம் தவணை
நான்காம் மாதம் நிறைவடைவதற்குள் கர்ப்ப காலம் மற்றும் ரத்த பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்திருக்க வேண்டும். செய்திருந்தால் அவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் அதேபோன்று இரண்டாம் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் பெற வேண்டும். அதை பெற்ற பின்னர் 2000 ரூபாய் மேலும் வழங்கப்படும்.
மூன்றாம் தவணை
அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்திருக்க வேண்டும் நிகழ்ந்திருந்தால் அந்த தாய்மார்களுக்கு நான்காயிரம் ரூபாயும் அதேபோன்று பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் அப்படி போட்டு இருந்தால் அந்த தாய்மார்களுக்கு மேலும் 4000 ரூபாய் வழங்கப்படும்.
இதையும் படிங்க : மிரட்டும் கொரோனா.. ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்!
ஐந்தாம் தவணை
பிறந்த குழந்தைக்கு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் போட்ட பின்னர் மேலும் 2000 ரூபாய் என மொத்தம் 18 ஆயிரம் ரூபாயை மகப்பேறு நிதி உதவியாக அரசு வழங்குகிறது.
இதனிடையே கருவுற்ற பெண்ணிற்கு கருச்சிதைவோ அல்லது கரு கலைப்பு நடந்தாலோ உதவித்தொகை வழங்கப்படாது அதேபோன்று கருவுற்ற பெண் மரணம் அடைந்து விட்டால் குழந்தை பாதுகாவலருக்கு உதவி தொகை வழங்கப்படும் குழந்தை இறந்து பிறந்தாலும் அல்லது குழந்தை இறந்து விட்டாலோ தாய்க்கு உதவி தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் பயனாளிகள் 19 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதேபோல் முதல் இரண்டு பிரசவத்திற்கு மட்டுமே இந்த உதவித்தொகையை பெற முடியும்
இந்த நிதியுதவி பெற கீழ்காணும் தகுதிகளில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pregnant, Pudukkottai, Tamil News