புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் பிரவீன் ரசாயன கற்கள், பொடி வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மாம்பழ சீசன்
தற்போது கோடை காலம் என்பதால் புதுக்கோட்டை மக்கள் அனைவரும் பழங்களை அதிக அளவில் வாங்குகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழங்களை விரும்பி உண்ணுகின்றனர். அதிலும் தற்போது கோடை காலம் என்பதால் நீர் சத்து அதிகம் நிறைந்த பழங்களை வாங்குகின்றனர். குறிப்பாக, தற்போது மாம்பழ சீசன் என்பதால் அனைவரும் விரும்பி வாங்கக்கூடிய ஒன்றாக மாம்பழம், தர்பூசணி பழம் போன்றவை இருக்கின்றன.
இதையும் படிங்க : வைகை ஆற்றுக்கு வந்த அவலநிலை.. துர்நாற்றத்தால் அவதிப்படும் மதுரை மக்கள்..
எப்படி கண்டறிவது?
இந்த பழங்களை வாங்கும்போது ரசாயன கற்கள், பொடி வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய செயல்முறை விளக்கமும் மேலும் பொதுவாக பழங்கள் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவைகள் பற்றியும் புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் பிரவீன் விளக்குகிறார்.
கட்டாயம் இதை கவனிங்க
பொதுவாக மாம்பழங்களை வாங்கும்போது அவை முழு மஞ்சள் நிறமாக இருப்பதாக வாங்க கூடாது. ஏனென்றால் அவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதாக இருக்கலாம். இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை நாம் உண்ணும் போது அவை கேன்சர் வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்கு நாம் இயற்கையான காய்கள் வாங்கி நாமே பழுக்க வைத்து சாப்பிட முடியும்.
குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு ஆபத்து
இந்த வகையான பழங்களை உண்ணுவதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எவ்வாறு கண்டறிவது என்றால், முதலில் நாம் வாங்கி வந்த மாம்பழங்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் பழங்களை போட வேண்டும் அதில் போட்டவுடன் தண்ணீரின் அடியில் சென்றுவிடும். மாம்பழங்கள் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டவை.
மாறாக, முழுகாமல் மேலே மிதக்கும் மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்பது நாம் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை நாம் உண்ணும்போது அவை கேன்சர் வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்கு நாம் இயற்கையான காய்கள் வாங்கி நாமே பழுக்க வைத்து சாப்பிட முடியும்.
இயற்கைக்கு மாறாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உண்ணுவதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். மேலும் இது போன்ற பழங்களை வியாபாரிகள் விற்றால் அவர்கள் மீது புகார் அளிக்கவும் முடியும். அதாவது எஃப். எஸ் .டி செயலி மூலமாக உங்களது புகார்களை அளிக்க முடியும் அந்த செயலி ஒருபோதும் உங்களது பெயர் விவரங்களை வெளியிடாது.
உடனே புகாரளிக்கலாம்
மேலும் தமிழக முழுவதும் whatsapp நம்பரும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.9444042322 இந்த வாட்ஸ்அப் எண் மூலமாக புகாரினை குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ அழைத்து பதிவு செய்ய முடியும். பதிவு செய்த 48 மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai, Summer