முகப்பு /புதுக்கோட்டை /

வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்க வடக்கு நோக்கிய இந்த அம்மனை வழிபடுங்கள்.. புதுக்கோட்டை பக்தர்களின் நம்பிக்கை!

வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்க வடக்கு நோக்கிய இந்த அம்மனை வழிபடுங்கள்.. புதுக்கோட்டை பக்தர்களின் நம்பிக்கை!

X
விராலிமலை

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில்

Viralimalai Meikannudayal Temple | புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்க் கண்ணுடையாள் அம்மன் கோவில் பல்வேறு சிறப்புகள் பெற்ற தலமாகும்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலின் சிறப்புகள் பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளதற்கு ஒரு செவி வழிச்செய்தி இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, முன்னொரு காலத்தில் கணவனும் ஒரு கர்ப்பமுற்ற மனைவியும் இவ்வழியை செல்லும்போது அந்த மனைவியை வடக்கு நோக்கி ஒரு கல்லில் அமர வைத்து விட்டு, “இதோ வந்து விடுகிறேன்” என்று கணவன் சென்றதாகவும், அதன் பின்னர் அவன் வராததனால் அப்படியே அந்த பெண் சிலையாக மாறி அம்மன் உருவம் பூண்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே பெண்களின் போற்றத்தக்க மற்றும் கேட்டது அனைத்தையும் நிறைவேறும் தெய்வம் என்ற நம்பிக்கையும் கொண்ட கோயிலாக இந்த கோயில் விளங்குகிறது. மேலும் பல்வேறு தோஷங்களும் பிரச்சனைகளும் நீங்க கோயிலுக்கு வந்து விளக்கேற்றி சென்றால் அனைத்தும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில்

மேலும், இக்கோயிலில் சித்திரை திருவிழாவானது மிகவும் விமர்சையாக வருடம் தோறும் நடத்தப்படும். இந்த திருவிழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினமும் சுவாமி ஊர்வலம் வருதல், பால்குடம், தீக்குண்டம், காவடி ஆடு கோழி பலி கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதன் பின்னர் இளைஞர்களின் படுகளம் ஆகியவை இக்கோயிலின் சித்திரை திருவிழாவின் சிறப்பான நிகழ்ச்சிகள் ஆகும். மேலும் இக்கோயிலின் முன்பாக இளம் பட்டக்கல் ஒன்று உள்ளது. அதை தூக்கிக்கொண்டு இக்கோயிலை இளைஞர்கள் சுற்றி வந்து தங்களுடைய வீரத்தினை காட்டுவார்கள் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    First published:

    Tags: Local News, Pudukkottai