முகப்பு /புதுக்கோட்டை /

கூடைகளில் இத்தனை வகைகள் இருக்கிறதா? விவரிக்கும் புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி பெண்.. 

கூடைகளில் இத்தனை வகைகள் இருக்கிறதா? விவரிக்கும் புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி பெண்.. 

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி பெண்

Pudukkottai News : கூடை பின்னுதல் மூலம் தொழில் முனைவோராக மாறிவரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கல்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா. இவர் 10 வருடங்களுக்கு மேலாக கூடை பின்னுதல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கை விரல்கள் சற்று செயல்படாது. இருந்தும் இந்த கூடை பின்னுதல் தொழிலில் ஈடுபட்டு முன்னேற்றம் கண்டுவருகிறார். இதுகுறித்து பேசிய ஜெயா, “எனது கை இப்படி இருப்பதால் எங்கும் வெளியில் வேலைக்கு செல்ல இயலாது. அதனால் இந்த கூடை பின்னுதலில் ஆர்வம் காட்டி கற்றுக்கொண்டு தற்போது இந்த கூடை பின்னுதல் தொழில் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறேன்.

ஒவ்வொரு கூடைகளுக்கும் ஒரு தனித்தனி விலை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். 100 நாள் வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கூடைகளை வியாபாரம் செய்து வருகிறேன். கடைகளில் கிடைக்கும் கூடைகளை விட என்னிடம் வாங்கும் கூடைகள் தரமானதாக இருக்கும். மேலும் அதிகமான கூடைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்பு சாதாரண கூடைகளை செய்து விற்பனை செய்தோம்.

தற்போது ஸ்டார் கூடை, சைடு கூடை, பூஜை கூடை, முக்கோண கூடை போன்ற பல்வேறு வகையான கூடைகளையும், மக்கள் எந்த விதமாக கேட்கிறார்களோ அதுபோலவும் செய்து கொடுத்தும் வருகிறேன். இன்னும் சில பெண்களுக்கு இந்த கூடை பின்னுதல் கற்றுக் கொடுத்தும் வருகிறேன்.  அடுத்தபடியாக இதனை சற்று பெரிய அளவில் ஆரம்பிக்கலாம் என்றும் இருக்கிறேன்” என்றார் ஜெயா.

First published:

Tags: Local News, Pudukkottai