முகப்பு /புதுக்கோட்டை /

Guru Peyarchi 2023 | துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு குருபெயர்ச்சி பலன்கள் - புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு

Guru Peyarchi 2023 | துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு குருபெயர்ச்சி பலன்கள் - புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு

X
குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி

Guru Peyarchi 2023 | துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை கணித்து கூறியுள்ளார் புதுக்கோட்டை மாவட்ட ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் துலாம், விருச்சிகம், மற்றும் தனுசு ஆகிய ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை கணித்து கூறியுள்ளார்.

துலாம்

சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 3, பாதங்கள் கொண்ட துலாம் ராசி நேயர்களே, உங்களுக்கு ஒரு பொன்னான நேரம் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் சிறக்கும். வருமானம் பெருகிடும். நோய் விலகும். துணிச்சலுடன் காரியமாற்றுவீர்கள். லாபம் பெருகும், பதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4, அனுஷம், கேட்டை நடசத்திரங்களைக் கொண்ட விருச்சக ராசி நேயர்களே, நீங்கள் உங்கள் உடல் நிலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். கல்வியில் கவனம் குறையும். வெளியூர் பயணங்கள் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். வம்பு சண்டைகள் பூர்வீக சொத்துக்கள் பிரச்சனை இடமாறுதல் போன்றவை ஏற்பட்டு மன உளைச்சலும் ஏற்படும்.

இதையும் படிங்க : Guru Peyarchi 2023 | மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் - புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம்-1 கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஏழரை சனி நீங்கிவிட்டது, குரு ஐந்தில் அற்புதமான காலம் நினைத்தது நடக்கும். பூர்வீக நற்பலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்களால் உடல்நலம் சற்று தளறும்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Gurupeyarchi, Local News, Pudukkottai, Rasi Palan