முகப்பு /புதுக்கோட்டை /

Guru Peyarchi 2023 | மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் - புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு

Guru Peyarchi 2023 | மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் - புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு

X
குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி

Guru Peyarchi 2023 | குரு பெயர்ச்சி பலன்களை கணித்து கூறியுள்ளார் புதுக்கோட்டை மாவட்ட ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் மகரம், கும்பம், மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை கணித்து கூறியுள்ளார்.

மகரம்

உத்திராடம் 2,3,4, திருவோணம் அவிட்டம் நட்சத்திரங்களை கொண்ட மகர ராசி அன்பர்களே, உடல் நோவில் இருந்த பெரும் செலவால் மீண்டு வருவீர்கள். தொழில் வேளையில் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் நிற்காது சுப விரயங்கள் மூலம் நன்மை ஏற்படுத்த செய்யலாம். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தந்தை பட்ட கடன் வந்து சிரமத்தை கொடுக்கும்‌. சில பொருட்களை விற்க நேரிடும். வண்டி வாகனங்கள் எச்சரிக்கை தேவை. வேலை தொழிலில் கவனம் தேவை.

கும்பம்

அவிட்டம் 3,4, சதயம், புரட்டாதி 1,2 கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்களைப் பொறுத்தவரை நன்மையும் தீமையும் கலந்தே வரும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. துணைவரை பொறுத்தவரை முன்னேற்றம் உண்டு என்றாலும் தாமதமாகவே கிடைக்கும். வெப்ப சம்மந்தமான நோய்கள் ஏற்படும். உணவில் கட்டுப்பாடு தேவை. வயிறு சம்பந்தமாக சிலருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

இதையும் படிங்க : Guru Peyarchi 2023 | கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு குரு பெயர்ச்சியில் இவையெல்லாம் நடக்கும் - புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு

மீனம்

புரட்டாதி-4, உத்திராடம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்ட மீன ராசி நேயர்களே,ஏழரையின் பிடியில் இருந்தாலும் குரு சற்று ஆதரவாக இருக்கும். யாருடனும் வாக்குவாதம் வேண்டாம். வாக்கு கொடுக்கவும் வேண்டாம். தொழிலின் சிறப்பாக பணியாற்றிய நாளும் வருவாய் ஈட்டினாலும் நெஞ்சில் நிம்மதி இருக்காது. பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும் இதற்கு முழு ஆறுதல் தருகிறார் சுப காரியங்களுக்கு செலவு செய்யலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Gurupeyarchi, Local News, Pudukkottai, Rasi Palan