முகப்பு /புதுக்கோட்டை /

Guru Peyarchi 2023 | கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு குரு பெயர்ச்சியில் இவையெல்லாம் நடக்கும் - புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு

Guru Peyarchi 2023 | கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு குரு பெயர்ச்சியில் இவையெல்லாம் நடக்கும் - புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு

X
குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி

Guru Peyarchi 2023 | கடகம், சிம்மம் மற்றும் கன்னி ஆகிய ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை கணித்து கூறியுள்ளார் புதுக்கோட்டை மாவட்ட ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் கடகம், சிம்மம் மற்றும் கன்னி ஆகிய ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை கணித்து கூறியுள்ளார்.

கடகம்

புனர்பூசம் 4 முதல் பூசம் வரை உள்ள கடக ராசி அன்பர்களே..ஒரு குறைந்த அளவிலே நன்மைகள் செய்வார். உங்கள் உழைப்பு கூடும். மனம் தளர்ச்சி அடையும். இருப்பினும் குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் மீண்டு வருவீர்கள். புதிய தொழில் வேண்டாம். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை.

சிம்மம்

மகம், பூசம், உத்திரம்-1, கொண்ட சிம்ம ராசி நேயர்களே, பல நன்மைகளை அடையக்கூடிய காலமாகும். உங்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்கவும். வருமானம் உயரும். பதவியில் உயர்வும் உண்டு, சிலருக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும், தொழில் விரிவடையும்.

இதையும் படிங்க : Guru Peyarchi 2023 | மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் - புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு!

கன்னி

top videos

    உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2 கொண்ட கன்னி ராசி அன்பர்களே, சற்று கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தங்கள் உடல் நலத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கங்கள் இட பிரச்சனைகள் ஏற்படும் .குழந்தைகள் வாழ்வில் தாமதமான முன்னேற்றம் ஏற்படும். செலவுகளும் உண்டு வருமானமும் குறையும்.

    First published:

    Tags: Gurupeyarchi, Local News, Pudukkottai, Rasi Palan