ஹோம் /புதுக்கோட்டை /

வரும் 28ஆம் தேதி புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

வரும் 28ஆம் தேதி புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Pudukkottai News | புதுக்கோட்டை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் அக்டோபர் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடக்கிறது.

இதில், புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த மாததுக்கான கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிக்கலாம். மேலும், வோளண்மை, தோட்டக்கலைத்துறை, நீர்பாசனம், கூட்டுறவு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக கழகம், கால்நடை, மின்சாரம், தொடர்புடைய கருத்துக்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், விவசாயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது. மேலும், இது குறித்து விவசாயிகள் மனுவாகவும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... பைக், காரில் சென்றால் இயற்கை அழகில் முழுமையாக மூழ்கித் திளைக்கலாம்!

அதன்படி கூட்டத்தில், பங்கேற்க விரும்பும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு வரும் முன் கணிணியில் தங்களது பெயர் முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்ய வேண்டும். மேலும், மனுக்களை கொடுக்கும் முன் ஒப்புதல் பெற்று, கணிணியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Farmers, Local News, Pudukottai