முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டம்.. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டம்.. 

X
குறைதீர்ப்பு

குறைதீர்ப்பு நாள் கூட்டம்

Pudukkottai News : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 283 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சி தலைவரிடம் அளித்தனர்.

இதையடுத்து, மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூபாய் 8000 மதிப்புடைய மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களையும், 3 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூபாய் 13,500 மதிப்புடைய ஸ்மார்ட் போன் ஆக மொத்தம் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 56,500 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குறைதீர்ப்பு நாள் கூட்டம்

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் என பல்வேறு துறையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Pudukkottai