பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜன். பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.75000 நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்கள் குறித்து அவர் விரிவாக தெரிவித்தார்.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செய்து வருகிறது. இலவசமாக புத்தகங்கள்,பாட குறிப்பேடுகள், சீருடைகள் என எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறது..இதற்காக வருடந்தோறும் கோடிக்கணக்கில் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து வருகிறது.
அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் சரியாக இல்லாததால் அதை மாணவர்கள் பெறுவது இல்லை. இலவச கல்வி என்பதுடன் நில்லாமல் மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
விபத்தில் பெற்றோர் உயிரிழப்பு:
அதில் ஒன்று தான் தமிழகத்தில் சாலை விபத்தில் பெற்றோர் உயிரிழக்கும் போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் பெயரில் ரூபாய் 75,000 வைப்பு நிதியாக அந்த மாணவர் பெயரில் வங்கியில் போடப்படும் என்ற திட்டம்.
இந்த திட்டங்கள் குறித்து தமிழக அரசின் அரசாணைகள் அரசாணை எண் 39/2005,195/2014,1 7/2018 தமிழக அரசால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் பலருக்கு இது தெரியாமல் உள்ளது.
இந்த திட்டம் குறித்தும்,மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்து , பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உதவி செய்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் குளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் பள்ளி ஆசிரியர் நாகராஜன்.
இவர் தான் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இலவசமாக விண்ணப்பங்களை தயார் செய்து தருகிறார். இவர் தமிழகத்தில் பாதிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் இந்த திட்டம் சென்று சேர வேண்டும் என்ற ஓரே நோக்கத்தில் இந்த சேவையினை இலவசமாக செய்து வருகிறார்.
இவர் செய்து வரும் விழிப்புணர்வு மூலம் அரசு பள்ளிகளில் இந்த விபரங்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் தெரிந்து தற்போது பெற்றோரை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த வருகின்றார்கள்.
அதேபோல மாணவர் விபத்தில் இறந்து விட்டால் அந்த மாணவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய்பணம் இழப்பீடாக வழங்கி வருகிறது. அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் நாகராஜன். ஆசிரியர் நாகராஜனை போன்ற தன்னலமில்லா உள்ளங்களினால் பணி மகத்தானதாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, Local News, Pudukkottai, Welfare scheme