முகப்பு /புதுக்கோட்டை /

நண்பன் பட பாணியில் வாழ்வியலோடு அறிவியலை கற்பிக்கும் ஆசிரியர்..

நண்பன் பட பாணியில் வாழ்வியலோடு அறிவியலை கற்பிக்கும் ஆசிரியர்..

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன்.

Pudukkottai News | மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் நாட்டமும் அதில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் வந்துள்ளது. இத்தனை முயற்சிகள் மற்றும் சாதனைகள் அனைத்தும் மகேஸ்வரன் என்ற அறிவியல் ஆசிரியரால் முன்னெடுக்கப்பட்டதாகும்

  • Last Updated :
  • Pudukkottai, India

அன்றாட வாழ்வில் சிறு நிகழ்வுகளை கூட அறிவியலோடு ஒப்பிட்டு மாணவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன்.

புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 15 வருடங்களாக அறிவியல் கண்காட்சிகள் மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகள் எங்கு நடந்தாலும் அதில் தவறாது கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வருகிறது.

இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்கள் எளிய வித்தியாசமான செயல்முறைகள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் நாட்டமும் அதில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் வந்துள்ளது. இத்தனை முயற்சிகள் மற்றும் சாதனைகள் அனைத்தும் மகேஸ்வரன் என்ற அறிவியல் ஆசிரியரால் முன்னெடுக்கப்பட்டதாகும்.

மேலும் படிக்க :  ஊட்டியில் ஒரே நாளில் சுற்றிப்பார்க்க இத்தனை இடங்களா?

மாணவர்களுக்கு அறிவியல் எப்படி பிடித்தமான பாடமாக மாறியது என்பது குறித்து ஆசிரியர் மகேஸ்வரனை கேட்டோம், “அன்றாட வாழ்வியலோடு அறிவியலை ஒப்பிட்டு பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதேபோல் மாணவர்களுக்கும் அந்த ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் தினந்தோறும் எளிய செயல்முறைகளில் அறிவியலை கற்றுக் கொடுத்து வருகிறேன். இந்த செயல்முறை கற்றலில் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன்.

மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றவுடன் இந்த அறிவியல் செயல்முறைகளை செய்து பார்த்து அடுத்த வகுப்பில் அது குறித்து விளக்கங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து வருவது எனது வழக்கம். அதே போல பல்வேறு செயல்முறைகள் மூலம் மாணவர்களுக்கு அறிவியலை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

மேலும் படிக்க :  தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரம்மாண்ட புத்தர் கோவில்..

மேலும் ஒவ்வொரு அறிவியல் கண்காட்சியின் போதும் எங்கள் பள்ளி மாணவர்களின் வித்தியாசமான கண்டுபிடிப்புகள் முதலிடம் பெற்று வருகிறது. தற்போது மாவட்ட அளவிலான ஒரு அறிவியல் கண்காட்சி போட்டிக்கு ஒரு புதிய கருவியை அதாவது உடற்பயிற்சி கருவியின் மூலம் மின்சாரம் பெறுதல் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளோம் இதுவும் முதலிடம் பெறும் என்று நம்பிக்கையுடன் உள்ளோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன்.

இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஸ்ரீநிதி பேசிய போது ”எங்கள் அறிவியல் ஆசிரியர் எளிய முறையில் அறிவியலை எங்களுக்கு தினந்தோறும் செயல்முறை விளக்கத்துடன் தேவையான பொருட்களை அவர்களே வாங்கி வந்து எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். அது எங்களுக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும். மேலும் நாங்களும் வீட்டிற்கு சென்றவுடன் அதேபோல் செய்முறைகளை செய்து பார்ப்போம். ஏதும் சந்தேகம் இருந்தால் நாங்கள் அடுத்த நாள் வந்து வகுப்பில் அறிவியல் ஆசிரியரிடம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரன் போல பாடங்களை எளிமையாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் கற்பித்தால் தமிழக மாணவர்கள் உலக அரங்கில் நிச்சயம் பல உயரங்களை தொடுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    First published:

    Tags: Local News, Pudukottai