முகப்பு /புதுக்கோட்டை /

நீர்மூழ்கி கப்பல், ஏர் கூலர்.. அறிவியல் கண்காட்சியில் அசத்திய புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்..

நீர்மூழ்கி கப்பல், ஏர் கூலர்.. அறிவியல் கண்காட்சியில் அசத்திய புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்..

X
அறிவியல்

அறிவியல் கண்காட்சியில் அசத்திய புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்

Science Exhibition | புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் நீர்மூழ்கிக் கப்பல், ஏர் கூலர் போன்ற பல்வேறு படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தி அசத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் வானவில் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றன.

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்த, தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது இலக்கிய மன்ற போட்டிகள், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்பட போட்டிகள் என பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி அதில் சிறந்த முறையில் செயல்பட்டு வெற்றியடையும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்கிறது தமிழக பள்ளி கல்வித்துறை.

அதில் ஒரு பகுதியாக வானவில் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடைபெற்றது. அதில் தேர்வு பெற்று வெற்றி அடையும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்பர். அந்த வகையில் புதுக்கோட்டைமாவட்ட அளவிலான போட்டிகள் நிஜாம் ஓரியண்டல் அரபி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் நீர்மூழ்கிக் கப்பல், ஏர் கூலர், நிலநடுக்கம் உணர்வி, தூசு உறிஞ்சி அன்றாட வாழ்வில் காற்றழுத்தம் என பல்வேறு வகையான படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.

அறிவியல் கண்காட்சியில் அசத்திய புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்

இந்த வானவில் மன்ற போட்டியில் கலந்துகொண்ட மாணவன் யோகபிரகாஷ் பேசியபோது, 'இதுபோன்ற போட்டிகள் நடத்துவது மாணவர்களாகிய எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஆசிரியர், பெற்றோர் என அனைவரும் எங்களை ஊக்கப்படுத்தி எங்கள் தனி திறன்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கின்றனர்.

மேலும் கல்வித்துறையின் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது என்பது நாங்கள் அங்கிருக்கும் வாழ்வியல் முறைகளையும், அந்த நாட்டை பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது" என்று கூறினார்.

First published:

Tags: Local News, Pudukkottai