முகப்பு /புதுக்கோட்டை /

விராலிமலை ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடுகள்.. வியாபாரிகள் மகிழ்ச்சி

விராலிமலை ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடுகள்.. வியாபாரிகள் மகிழ்ச்சி

X
ஆட்டுச்

ஆட்டுச் சந்தை

Pudukkottai | விராலிமலையில் இந்த வாரம் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆட்டுச் சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. போட்டி போட்டுக்கொண்டு வியாபாரிகள் ஆடுகளை வாங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விலை உச்சத்தை தொட்டது. இருப்பினும் தேவைக்காக விலையை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றதால் ஒரு கோடி ரூபாயைத் தாண்டி வர்த்தகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரந்தோறும் ஆட்டு சந்தை நடைபெறும். இந்த ஆட்டுச்சந்தை சுற்றுவட்டார பகுதியில் மிகவும் பிரபலமாகும். சுற்றுவட்டாரம் மட்டுமல்ல பாண்டிச்சேரி, தேனி, பெரியகுளம், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதல் நாள் இரவே லோடு வாகனங்களில் சில வியாபாரிகள் வந்து தங்கி இருந்து அதிகாலை நடைபெறும் ஆட்டுச் சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக ஆடுகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் ஆடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது. சுமாராக ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனையாகும். சந்தையில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக 300, 400 ஆடுகளே விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை நடந்த ஆட்டுச் சந்தையில் பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் சுமாராக 5,000 ரூபாய் வரை விலை போகும் ஆடுகள் இன்று 7,000 ரூபாயைத் தாண்டியும், 10,000 ரூபாய்க்கு விலை போகும் மாடுகள் 13 ஆயிரம் ரூபாயைத் தாண்டியும், 15 ஆயிரம் விலை போகும் மாடுகள் 18 ஆயிரத்தை தாண்டியும் விற்பனையானது.

ஆடுகள் விலையேற்றத்தை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். பொதுவாக விராலிமலை வாரச் சந்தையில் விற்கப்படும் ஆடுகளின் கறிக்கு ருசி அதிகம் என்று கூறப்படும் நிலையில் விலையை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சகவ்யம் செய்வது இத்தனை சுலபமா? இயற்கை விவசாயத்துக்கு புதுக்கோட்டை விவசாய தம்பதியர் சொல்லும் வழிமுறை.!

காலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டுச் சந்தையில் 7.30 மணி நிலவரப்படி ஒரு கோடியை தாண்டி வர்த்தகம் ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Pudukkottai