புதுக்கோட்டை மாவட்டம் வடுகபட்டி கிராமம் கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த பெண் காவேரி. இவர் எம்.ஏ.ஆங்கில பட்டதாரி. கிராமிய பாடல்கள் மீது சிறு வயது முதலே பெரும் ஆர்வம் கொண்ட இவர் கேள்வி ஞானத்தின் வழியாகவே பல்வேறு பாடல்களை தானாக கற்றுக்கொண்டு தற்போது பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பாடல்கள், கிராமிய கலை நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி வருகிறார்.
தற்போது இவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பாடி வருகிறார்.
சிப்காட் டிஎன்பிஎல் ஆலை திறப்பின்போதும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து பேசிய காவேரி, “நான் சின்ன வயசுல இருந்தே பாட்டு அதிகமா கேட்டுட்டு இருப்பேன். யாரும் இல்லாதப்பவும் சரி, இல்ல யாராவது பார்த்தாலும் சரி என்னை அறியாமலேயே எனக்கு பாட்டு வந்துரும். நான் அடிக்கடி வந்து சினிமா பாட்டுகளை முன்முனுத்துட்டே இருப்பேன். முதலில் 3வது வகுப்பில் தான் பாட்டு பாடி முதல் பரிசினை வாங்கினேன்.
அப்படியே ஒவ்வொரு வருஷமுமே நான் பாட்டு போட்டியில் கலந்துக்குவேன். பள்ளியிலும் சரி கல்லூரிகளிலும் சரி நான் ஆர்வத்தோடு கலந்துகொள்கிற ஒரே போட்டி அப்படினா அது பாட்டு போட்டி மட்டும்தான். அதே மாதிரி அந்த பாட்டு போட்டியில் பரிசு வாங்காமல் வந்ததே இல்ல. வீட்டுக்கு முதல் 3 இடத்துக்குள்ள வந்துருவேன். அதிகமா முதல் பரிசு தான் வாங்குவேன். இதுவரைக்கும் அதிகமான அளவில் சான்றிதழ் வாங்கிருக்கேன். மிகவும் சந்தோசமான ஒரு சான்றிதழ் விருது ஒன்னு வாங்கினேன்.
அது என்னோட 16 வயசுல யுவஸ்ரீ கலாபாரதி விருது. நேரு யுவகேந்திரா டிரஸ்ட் மூலமா எனக்கு கிடைச்சது.
இன்னும் நிறைய விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், சொந்தமா எழுதனும். என்னோட ஆசை அதற்கான முயற்சிகளும், பயிற்சிகளும் இப்போது தொடர்ந்து எடுத்திட்டு இருக்கேன். கண்டிப்பா ஒரு நாள் என்னோட பாட்டு எல்லோருக்கும் கேட்கணும் என்கிறது என்னோட ஆசை” என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai