புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஒன்றிய அலுவலகத்தில் பாலின சமத்துவம் மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடைபெற்ற பேரணியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
இப்பேரணியானது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி தேரடி வீதி வழியாக சென்று பேருந்து நிலையம் வழியாக கடைவீதி தெருவின் வழியே செக்போஸ்ட் நிலையத்தை கடந்து மீண்டும் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிந்தது. பேரணியின் போது பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
அதில் ”பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளை தடுத்து நிறுத்துவோம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவோம், குழந்தைகள் திருமணத்தை தடுக்க 1098 உதவி எண்ணை அழைப்போம், பாலியல் வன்முறைகள் , குடும்ப வன்முறை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பாலின அடிப்படையிலான வன்முறைகள் எந்த வடிவில் நடந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அதனை எதிர்த்து குரல் கொடுப்போம் என்றும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இப்பேரணியை விராலிமலை ஒன்றிய பெருந்தலைவர் . காமு. மணி அவர்கள் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஒன்றிய அலுவலக மேலாளர் கண்ணன் மற்றும் 80 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்- சினேகா விஜயன் (புதுக்கோட்டை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai, Tamil News