முகப்பு /புதுக்கோட்டை /

"மார்ச் மாதம் இந்த ராசியினருக்கெல்லாம் பணம் கொட்டும்" புதுக்கோட்டை ஜோதிடர் துள்ளிய கணிப்பு!

"மார்ச் மாதம் இந்த ராசியினருக்கெல்லாம் பணம் கொட்டும்" புதுக்கோட்டை ஜோதிடர் துள்ளிய கணிப்பு!

X
ராசிபலன்

ராசிபலன்

March 2023 Rasipalan | புதுக்கோட்டை ஜோதிடர் மாரிக்கண்ணனின் 12 ராசிக்கான மார்ச் மாத பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 வருடங்களுக்கு மேலாக ஜோதிட கணிப்பில் ஈடுபட்டு வரும் சௌ.மாரிக்கண்ன் அவர்களின் கணிப்பில் மார்ச் மாதத்திற்கான 12 ராசிகளின் பலன்கள்.

மேஷம்

அன்பார்ந்த மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு நற்பலன்கள் நடக்கும். மாதம் முதல் பகுதியில் இருந்து பணவரவும், தொழில் உயர்வும் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் மாதம் பிற்பகுதியில் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் உடல் நலத்திற்காக செலவழிப்பீர்கள் துணைவருடன் விவாதம் வேண்டாம். வெளிநாட்டு பயணங்கள் தள்ளிப் போகும். மேலும் உள்ள மனக்குழப்பங்கள் நீங்க தியானம் செய்யுங்கள்.

ரிஷபம்

அன்பார்ந்த ரிஷப ராசி நேயர்களே உங்கள் தொழில், உத்தியோகம், வியாபாரம் மேன்மை அடையும் கடன் பட்டு வண்டி, மனைகளை வாங்குவீர்கள். குழந்தைகளின் படிப்பு சிறப்படையும். கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வாய்ப்புகள் தேடி வரும். துணைவரின் உடல் சிறிது பண செலவிற்கு பிறகு சரியாகும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். தாயை மார்ச் 11, 12ம் தேதிகளில் கவனித்துக் கொள்ளவும்.

மிதுனம்

தொழிலில் மந்த நிலை தோன்றும். பொருளாதாரத்தில் தேக்கநிலை ஏற்படும். சற்று காலத்திற்கு பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளின் கல்வி மேன்மை அடையும். துணைவரிடம் அனுசரித்துப் போகவும். பின் விவாதங்கள் வேண்டாம். கடன் பெற்று கடனை தீர்ப்பீர்கள். ஏழை மாற்றுத்திறனாளி ஊனமுற்றோர்களுக்கு உதவி நற்பலன்களை பெறுங்கள்.

கடகம்

கடக ராசி நேயர்களே நீங்கள் தந்தை வழியிலும் பிள்ளைகள் வழியிலும் சில ஆதாயங்களை அடைவீர்கள். தாய் வழி சொத்துக்களை அடைய வழி உண்டு. மாதம் முப்பகுதியில் தந்தையின் உடல் நிலையில் சிறிய பாதிப்பு ஏற்படும். சிலருக்கு தொழில் ரீதியில் புதிய தொடர்புகள் ஏற்படும். உங்கள் துணைவரால் சில நன்மைகள் பெறுவீர்கள். வருத்தப்படாமல் அமைதிக்காகவும்.குல தெய்வ வழிபாடு செய்து பலன் பெறலாம்.

சிம்மம்

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வாழ்க்கை துணைவகையில் பொருளாதாரம் உயரும். மாத பிற்பகுதியில் இந்த ராசிக்காரர்களுக்கு வெப்ப சம்மந்தமான நோய்கள் உண்டாகும். உணவில் கட்டுப்பாடு தேவை. மேலும் நன்மைகள் பெருகிட முன்னோர்கள் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வரவும்.

கன்னி

மாதம் முற்பகுதியில் நிலைமை சற்று மந்தமாக இருக்கும். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் காண முடியாது. தங்கள் அடைய வேண்டிய பூர்வ புண்ணிய சொத்துக்கள் வர தாமதம் ஆகும். மாத பிற்பகுதியில் நிலைமை சீரடையும். விலங்குகள் பசியாற்றி நன்மை பெறுங்கள்.

துலாம்

தங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் அடங்கி போவார்கள். பொருளாதாரம் நிலை உயரும். சிலருக்கு சில காயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து அல்லது பணவரவு சற்று தாமதிக்கும் குழந்தைகள் கல்வி மேன்மையடையும். ஏழை எளிய மக்களுக்கு உதவி நன்மை அடையுங்கள்.

விருச்சிகம்

நீங்கள் நினைத்தது நடக்கும் தடைகள் எல்லாம் நீங்கி தைரியமாக செயலாற்றுவீர்கள். உங்கள் குழந்தைகள் கல்வி தொழிலில் சிறப்பு அடைவார்கள். வீடு மனை விவகாரத்தில் தலையிட வேண்டாம். துணைவருக்கு ரத்த சம்பந்தமான நோய்க்கு செலவிட நேரிடும் நிதானமாக செயல்பட வேண்டும். காகத்திற்கு உணவு அளித்து மேலும் நன்மைகளை அடையுங்கள்.

தனுசு

கடன் தொல்லைகள் கட்டுக்குள் அடங்கும். குழந்தைகள் உடல் நலத்திலும் உங்கள் உடல்நலத்திலும் சிறு சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். மாத பிற்பகுதியில் உங்கள் துணைவரின் மூலம் சில பிரச்சனைகள் தோன்றி மன அமைதி குறையும். தாயின் உடல் நலத்திற்கு சிறு செலவுகள் ஏற்படும்.பெரியோர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு நன்மைகள் தரும்.

மகரம்

கடினமான முயற்சியின் பெயரிலேயே சிறிது பலன் கிடைக்கும். யாரிடமும் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். குழந்தைகளுக்கு காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தலாம். குழந்தைகளின் கல்வி வேலை வாய்ப்பு மேன்மைய அடையும். பெற்றோர்களின் உடல்நிலை சீராக இருக்கும். அனைத்தையும் போராடி சமாளித்து விடுவீர்கள்.

கும்பம்

சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும் கடன் தொல்லை கொஞ்சம் குறையும். தாய் வழி உறவுகளால் வருத்தம் ஏற்படும். மனை, பூமி சம்பந்தமான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சிலருக்கு இடம் மாற்றும், கட்டிய வீட்டை வாங்குதல் போன்றவை நடைபெறும்.

மீனம்

தன்னம்பிக்கையுடன் செயலாற்றி வெற்றி காண்பீர்கள். துணைவரின் மூலம் சிறப்புகள் ஏற்படும். குழந்தைகளின் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள் திட்டமிட்ட காரியங்கள் நடந்தேறும். தந்தையின் உடல் நலம் சீராக இருக்கும். பதட்டம் இன்றிசெயல்பட்டு வெற்றி பெறுங்கள்.

First published:

Tags: Astrology, Local News, Pudukkottai, Zodiac signs