முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் இலவச கண் மருத்துவ முகாம்.. பயன்பெற்ற மக்கள்!

புதுக்கோட்டையில் இலவச கண் மருத்துவ முகாம்.. பயன்பெற்ற மக்கள்!

X
இலவச

இலவச கண் மருத்துவ முகாம்

Pudukkottai eye camp | புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கொடும்பாளூரில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மூவர் ஐவர் இளைஞர்கள் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கொடும்பாளூரில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மூவர் ஐவர் இளைஞர்கள் இணைந்து தனியார் கண் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மூலம் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது . மேலும் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழி லென்ஸ் பொருத்தம் சிகிச்சையும் நடைபெற்றது.

இந்த முகாமில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கும் இலவசமாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 21 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இது குறித்து பேசிய இளைஞர்கள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாமை ஏற்பாடு செய்தோம். இதன் மூலம் பலர் பயன் பெற்றனர்.மேலும் இது போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்ய உள்ளோம் என்று தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Pudukkottai