ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்- பங்கேற்று பயன்பெற்ற மக்கள் 

புதுக்கோட்டையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்- பங்கேற்று பயன்பெற்ற மக்கள் 

X
மருத்துவ

மருத்துவ முகாம்

Pudukkottai | புதுக்கோட்டையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்று பொதுமக்கள் பயன்பெற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவேலி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் வரும்முன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம் வட்டார மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.

இந்த முகாமில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் பொது மருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, சித்த மருத்துவம், கண் மருத்துவம், கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் பரிசோதனை, பல் மருத்துவம், அனைத்து ஆய்வக பரிசோதனை, மன நல மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் பொது மக்களுக்கு செய்யப்பட்டன. மேலும் சில பேருக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், ‘வரும் முன் காப்போம் மருத்துவத் திட்டம் கிராமத்தில் உள்ள மக்களுக்கும் மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது சில ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தொலைவில் இருக்கும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை மற்றும் அவர்களின் உடல் நலத்தில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யவும், அதிக தொலைவு கடந்து மக்கள் சிலர் செல்ல முடியாத நிலையில் இருப்பர்.

குரூப்புல டூப்.. புதுக்கோட்டை கீரனூரில் கன்றுக் குட்டிகளை அடக்கிய காளையர்கள்...

அவற்றை தடுக்கவும் அனைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் தற்போது தமிழக அரசின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.

First published:

Tags: Local News, Pudukkottai