முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் தீத்தொண்டு வார விழா விழிப்புணர்வு மாரத்தான்..

புதுக்கோட்டையில் தீத்தொண்டு வார விழா விழிப்புணர்வு மாரத்தான்..

X
தீத்தொண்டு

தீத்தொண்டு வார விழா விழிப்புணர்வு மாரத்தான்

Pudukkottai Fire Charity Week Festival | புதுக்கோட்டையில் தீ தொண்டு வாரவிழா விழிப்புணர்வு மாரத்தான் புதுக்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் உள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை, தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் கார்த்திகேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் ஓட்டமானது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வழியாக திலகர் திடல், பழனியப்பா கார்னர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு பின்புறம் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நிறைவடைந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    புதுக்கோட்டையில் நடந்த இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில், விளையாட்டு வீரர்கள் தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Pudukkottai