ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள் - செலவுகளை குறைக்கிறது.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள் - செலவுகளை குறைக்கிறது.!

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்க டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும்  ஏக்கருக்கு ரூ.1500 தான் செலவாகிறது. மேலும் டிரோன்களை வாடகைக் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்க டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏக்கருக்கு ரூ.1500 தான் செலவாகிறது. மேலும் டிரோன்களை வாடகை விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னவாசல் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதோடு கால விரயமும் ஏற்படுவதால் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியை சேர்ந்த முத்துராமன் என்ற விவசாயி ட்ரோன் கேமராவை பயன்படுத்தி பயிர்களுக்கு மருந்து தெளிப்பில் ஈடுபட்டு வருகிறார். விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிருக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பவர் ஸ்பிரேயர் மூலம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏக்கர் வரை மட்டுமே மருந்து தெளிக்க முடியும் என்ற நிலையில் ட்ரோன் மூலம் ஒரு நாளைக்கு 20 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரை பூச்சி மருந்து தெளிப்பதோடு பூச்சிக்கொல்லி மருந்து தேவை பாதியாக குறைகிறது.

இதையும் படிங்க : வியக்க வைக்கும் திருமயம் கோட்டை - தேடி செல்லும் வெளிநாட்டவர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..

வயல்களில் செடிகளை மிதிக்காமல் மருந்து தெளிப்பதால் செடிகளுக்கு எந்த சேதாரமும் ஏற்படுவதில்லை. இவற்றுடன் முக்கிய நன்மையாக நோய் பரவல் அதிக பரப்பளவில் இருக்கும் பொழுது இந்த வகை டிரோன் கருவி மூலம் பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதும் ஒரே நேரத்தில் மருந்து தெளிப்பதனால் நோய்களின் பரவுதல் தடுக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க தோராயமாக ஏக்கருக்கு ரூ.1,500 செலவாகிறது. ஆட்கள் பற்றாக்குறை நிலவும் இச்சூழ்நிலையில் இத்தகைய ட்ரோன் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும், நோய்கள் பரவு தலை உடனடியாக கட்டுப்படுத்தி விளை பொருட்கள் சேதமடையாமல் அறுவடை செய்ய முடியும் என்றும் விசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Pudukottai