முகப்பு /புதுக்கோட்டை /

பரம்பூர் நெல் கொள்முதல் நிலையம் சிறப்பாக செயல்படுகிறது... புதுக்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி

பரம்பூர் நெல் கொள்முதல் நிலையம் சிறப்பாக செயல்படுகிறது... புதுக்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி

X
நெல்கொள்முதல்

நெல்கொள்முதல் நிலையம்

Pudukkottai News | புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பரம்பூர் நெல் கொள்முதல் நிலையம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

கண்காணிப்பு கேமரா, நெல் போட டோக்கன், போட்டவுடன் இரண்டு நாட்களுக்கு பின்னர் எடைபோட்டு நெல் கொள்முதல் என்று புதுக்கோட்டை பரம்பூர் நெல் கொள்முதல் நிலையம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்(டி.என்.சி.எஸ்.சி) தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது. குறுவை சாகுபடியில் அறுவடையாகும் நெல் அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும், சம்பா சாகுபடியில் அறுவடையாகும் நெல், ஜனவரி-மார்ச் மாதங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்படுகின்றன.

நெல்கொள்முதல் நிலையம்

நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையம் சுமார் 33 சென்ட் பரப்பளவில் 100 மெட்ரிக் டன் சேமிப்பு வசதி, உலர்த்தும் தளம், வின்னோவிங் மெஷின் (பதர் தூற்றும் இயந்திரம்), மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பத மானி, ஆகியவற்றோடு செயல்படும்.

மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், பெரும்பான்மையானவை டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்கும் தேவைக்கும் ஏற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் கிராமத்தில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கூடுதலாக பணம் வாங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் ”பரம்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்டு வருவதாகவும் இங்கு இருக்கும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதில்லை” எனவும் இங்கு நெல் போட வரும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகளிடம் பேசிய போது, ‘இங்கு வரிசை முறையில் டோக்கன் வழங்கப்பட்டு சரியான எடையும் போடப்பட்டு பின் இரண்டு நாட்களில் தங்களுக்கு பணம் ஏறி விடுவதாகவும் இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுற்றியுள்ள 10 கிராம விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் எந்தவித இடைத்தரகர்களின் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருகின்றதாகவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறந்த முறையில் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேசிய விவசாயி பொன்னையா, ‘இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் முதலில் நெல்லைக் கொண்டு வந்த உடன் டோக்கன் போட்டு பின் வாட்ஸ் அப் குரூப்பில் அவை ஷேர் செய்யப்பட்டு வரிசை அடிப்படையில் இரண்டு நாட்களுக்குப் பின் எடை போட்டு அவர்களுக்கு பணமும் வந்து விடுகிறது.

ஆலங்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்.. மல்லுக்கட்டிய காளையர்கள்..

மேலும் விவசாயிகள் மட்டுமே இங்கு நெல் போடுவதற்கு அனுமதிக்கப்பட்டு வேறு எந்த வியாபாரிகளும் இல்லாமல் அரசின் வழிகாட்டுதலின்படி சரியான முறையில் யாருக்கும் எந்த ஒரு கையூட்டும் வழங்கப்படாமல் செயல்பட்டு வருகிறது. இதுவரை 15 ஆயிரம் நெல் மூட்டைகள் இங்கு உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Pudukkottai