ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை விவசாயிகளே தோட்டக்கலை பயிர்களை காக்க இதை செய்யுங்கள்...!

புதுக்கோட்டை விவசாயிகளே தோட்டக்கலை பயிர்களை காக்க இதை செய்யுங்கள்...!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai News | பருவ மழை துவங்குவதால், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், தோடட்டக்கலை பயிர்கள் பாதிக்காத வண்ணம் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

பருவமழை துவங்கியுள்ளதால், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், தோடட்டக்கலை பயிர்கள் பாதிக்காத வண்ணம் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதற்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை செய்து, பயிர் களை பாதுகாத்துக்கொள்ளலாம். பசுமைக்குடில்கள் மற்றும் நிழல்வலைக்குடிகளில் பயிர் செய்யும் விவசாயிகள் பருவமழை காலத்தில் அதன் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைத்து கட்டுவதன் மூலம் சேதத்தை தடுக்கலாம்.

மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்யவேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப்பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும்.

இதையும் படிங்க : அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்.. திடீரென நிகழ்ந்த விபரீதம்: கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். இளம்செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வாழையில் சேதத்தை தடுக்க, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கலெக்டர் கவிதா ராமு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Pudukkottai