ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் ஒரு புதுமையான நர்சரி.. அப்படி என்ன ஸ்பெஷல்?

புதுக்கோட்டையில் ஒரு புதுமையான நர்சரி.. அப்படி என்ன ஸ்பெஷல்?

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District Recent News | புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் புதுமையான முறையான குழித்தட்டு முறையில் கன்றுகளை பதியம் போட்டு வளர்க்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள  வடகாடு கிராமம், வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவகுமார். இவர் தனது வீட்டின் அருகே நாற்றுப்பண்ணை ஒன்றை அமைத்து அதில் காய்கறி உள்ளிட்ட செடிகளை வளர்த்து விற்பனையும் செய்து வருகிறார். பொதுவாக நாற்றுப் பண்ணைகள் மற்றும் நர்சரி கார்டன்களில் விதைகளை தரையில் விதைத்து அதில் இருந்து கன்றுகளை வளர்க்கும் முறையை பின்பற்றி வரும் நிலையில் விவசாயி சிவகுமார் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று  நாற்றுப் பண்ணைகள் மற்றும் நர்சரி கார்டன்களை பார்வையிட்டு அங்கு எளிய முறையாகவும் சிக்கனமான முறையாகவும் இருக்கும் குழித்தட்டு முறையைப் பற்றி அறிந்து கொண்டுள்ளார்.

பின்னர் குழித்தட்டு முறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அங்குள்ள விவசாயிகள் மற்றும் அந்த முறையைப் பின்பற்றுபவர்களிடம் அதைப் பற்றி மேலும் கேட்டு அறிந்த விவசாயி சிவக்குமார், நமது பகுதியிலும் ஏன் இவ்வாறு செய்து பார்க்க கூடாது என்ற எண்ணத்தில் புது முயற்சியாக குழித்தட்டு முறையில் இந்த காய்கறிகள் மற்றும் இதர கன்றுகளை வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் படிக்க:  முக்காலி மூலம் திருடனை கண்டறியும் கிராம மக்கள்.. புதுக்கோட்டையில் விநோதம்..

அந்த முயற்சியின் முதல்படியாக தனது வீட்டின் அருகிலேயே ஒரு நர்சரி கார்டன் ஒன்றை ஏற்படுத்தி அதில் குழித்தட்டு முறைக்கு தேவையான குழிவான அமைப்புடைய அட்டைகளை வாங்கி அதில் தென்னை நாரில் இருந்து எடுக்கும் கழிவுகளான தென்னை மஞ்சியை நிரப்பி அதில் மிளகாய், தக்காளி மற்றும் கத்தரிக்காய் போன்ற செடிகளின் விதைகளைப் போட்டு சீரான முறையில் வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றுகளை வளர்த்து விற்பனை..

இதற்காக ஆரம்பத்தில் பெரிய முயற்சி எடுத்தாலும் பின்னர் எளிமையான ஒரு முறையாக குழித்தட்டு முறை விவசாயிக்கு  தெரிந்துள்ளது. இதனை அடுத்து தென்னை மஞ்சியை குழித்தட்டு முறையில் தட்டுகளில் நிரப்பி அதில் தேவையான விதைகளை போட்டு வளர்த்து அதற்குரிய தண்ணீர், தேவையான வெப்ப நிலை ஆகியவற்றைக் கொடுத்து வளர்த்து வரும் போது சீரான அளவுடைய சேதமடையாத கன்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றுகளை வளர்த்து விற்பனை..

இதன் பின்னர் தான் மட்டுமின்றி அப்பகுதி விவசாயிகளும் பயன்பெறும் நோக்கில் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த கன்றுகளை விற்கத் தொடங்கி உள்ளார். விற்பனை நன்றாக நடக்கவே வீட்டின் அருகே உள்ள நர்சரி பராமரித்துக் கொண்டே வடகாடு- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஒரு நர்சரி பண்ணை அமைத்து அதிலும் கன்றுகளை விற்பனை செய்து வருகிறார் இந்த புதுமையான முயற்சி மிகவும் சிக்கனமாக இருப்பதாகவும் விவசாயிகளுக்கு செலவை குறைப்பதாகவும் உள்ளதாக சிவகுமார் தெரிவிக்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த காய்கறிகள் மட்டுமின்றி மிளகு மற்றும்ங அரியவகை மூலிகை செடிகள் என பலவற்றையும் தனது நர்சரியில் வளர்த்து வருகிறார் சிவகுமார். வறண்ட பகுதியான புதுக்கோட்டையில் இவரைப் போன்ற விவசாயிகள் எடுக்கும் புது மாதிரியான முயற்சிகளால் விரைவில் புதுக்கோட்டை மாவட்டம் பசுமை மாவட்டமாக மாறும் என அப்பகுதி மக்கள் பெருமை தெரிவிக்கின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram