புதுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள கிராமம் ஆதனக்கோட்டை. ஊருக்குள் நுழையும்போதே முந்திரி மணம் மூக்கைத் துளைக்கிறது. சாலையோரம் சின்னச் சின்ன கீற்றுக் கொட்டகைகள். வெளியே முந்திரிப் பருப்புகள் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் 60 வருடங்களுக்கு மேலாக இந்த முந்திரி தொழிலில் ஈடுபட்டு வரும் சசிகலா இது பற்றி நம்முடைய பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், மொத்தமாக 10 ஆயிரம் ரூபாய்க்கு நாங்கள் முந்திரி காய்களை வாங்கி ஒரு மூட்டையை உடைத்து எடுப்பதற்கு ஐந்து முதல் ஆறு நபர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களுக்கு கூலி கொடுத்த மிச்சமாக விற்று முடித்தால் 2,000 கிடைக்கும்.
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பணம் வாங்கி இந்த தொழில் நடத்தி வருகிறோம். நாங்கள் இந்த சாலை ஓரங்களில் குடிசையிட்டு சுட சுட முந்திரிகளை தயார் செய்து பாக்கெட் செய்து விற்பனை செய்கிறோம். இந்த வழியாக செல்போர்கள் வாங்கினால் எங்களுக்கு அது லாபமாக இருக்கும்.
ALSO READ | நாட்டாணி ஸ்ரீ சதுரமுடைய அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் - திரளான மக்கள் பங்கேற்பு!
ஆனால் அப்படி விற்காமல் போய்விட்டால் நாங்கள் மொத்தமாக விற்பனை செய்யும்போது எங்களுக்கு லாபம் வராது. கால் கிலோ 200 ரூபாய் முதல் அரை கிலோ 400 ரூபாய் என்ற விலைகளில் விற்பனை செய்வோம். நாங்கள் மொத்தமாக விற்பனை செய்யும் போது ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது என்றும் மழைக்காலங்களில் அதிகமான சிரமங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கிறார் சசிகலா.
கைமுறையில் முந்திரிக்கொட்டையை நன்றாக எரித்து அதில் உள்ள பாலை எல்லாம் வெளியேற்றி விட்டு, கையால் உடைத்து மேல் தோலை எடுக்கிற முந்திரிதான் ஆதனக்கோட்டையின் ஸ்பெஷல் முந்திரி. இது உடம்புக்கும் நல்லது என்றும், சீக்கிரம் கெட்டு போகாது நிறமும் மாறாது. உணவிலும் அப்படியே சேர்த்துக்கலாம். எந்தவிதமான நோய் உடையவரும் இதனை சாப்பிடலாம் எந்த பாதிப்பும் ஆகாது என்றும் தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cashew Nuts, Local News, Pudukkottai