ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம்.. ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பயிற்சி..!

புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம்.. ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பயிற்சி..!

இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள்

இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள்

Pudukkottai | முகாமில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாடு குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai | Pudukkottai

  புதுக்கோட்டையில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள், பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

  தமிழகத்தில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு தமிழகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அந்தந்த யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மாபெரும் தொழில் திறன் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாடு குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது.

  இதையும் படிங்க | புதுக்கோட்டை மக்களே.. நாளை இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

  இதில் சென்னை கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் உள்ள நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை வழங்கினர்.

  இந்த தொழில் திறன் பயிற்சி முகாமில் நர்சிங், கம்ப்யூட்டர் சர்வீஸ், டெலிகாஸ், தையல், அழகுக்கலை, ஐ.டி.ஐ, போன்ற பல்வேறு இலவச திறன் பயிற்சிகளும், வெளிநாட்டு பணியில் சேர வழிகாட்டுதலும் கொடுக்கப்பட்டது. இதில் எட்டாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு படித்த ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

  செய்தியாளர்: சினேகா, புதுக்கோட்டை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Jobs, Pudukkottai