முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரி ஷியாமளா தெரிவித்துள்ளார்.
சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலும், சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிக்கும் வகையிலும் இந்த சாதி மறுப்பு திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க
கலப்பு திருமணத்தை ஊக்குவிப்பதன் மூலம் பிரிவு அடிப்படையிலான சாதி மற்றும் சமூக உணர்வுகளை ஒழிக்கவும், பாகுபாட்டை துடைப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் இந்த திட்டத்தின் முழு விளக்கத்தினை புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் கூடுதல் பொறுப்பில் உள்ள ஷியாமளா விளக்குகிறார்.
"முதலில் இந்த திட்டத்தில் பயன்பெற மணமகனும், மணமகளும் வெவ்வேறு வகுப்பை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதாவது முற்பட்டோர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், இவர்கள் உரிய ஜாதி சான்றிதழுடன் அவர்களின் திருமண பதிவு சான்றிதழும் சமர்ப்பிக்க வேண்டும்.
திருமணம் ஆகி இரண்டு ஆண்டு வரை விண்ணப்பிக்கலாம். இவர்களின் திருமணத்தை பதிவு செய்திருத்தல் வேண்டும். வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. மணமகன் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் , மணமகள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு 25 ஆயிரம் தாலிக்கு ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும். அதில் 15 ஆயிரம் வழங்கப்பட்டு பத்தாயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும். அதேபோல் பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படுகிறது. அதில் முப்பதாயிரம் வழங்கப்பட்டு இருபதாயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இ-சேவை மையங்கள் வழியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukottai