புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாவது தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் தேங்கி இருந்தால் அதில் கொசு புழுக்களை அழிக்கும் மருந்தும் தெளித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், புதுக்கோட்டை விராலிமலைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் நீர் நிலைகளில் மருந்து தெளித்து வருகின்றனர்.
தற்போது மழை காலம் என்பதால் வீடுகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் பொது மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ஒவ்வொரு பகுதியாக காலை நேரங்களில் வீடு வீடாக சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் தேங்க வாய்வு இருக்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தவும் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின்போது வீடுகளில் மழைநீர் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்தால் உடனடியாக அவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்த மருந்து தெளித்தனர்.
இதுகுறித்து கிராம சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் பேசியபோது “நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அந்த காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் வளரக்கூடிய இயல்பை உடையது ஆகும். இந்த வகையான கொசுக்கள் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும் மேலும் நோய் தொற்றையும் ஏற்படுத்தும்.
எனவே இந்த வகை கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையின் கீழ் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.
இந்த பணிக்காக சுகாதார ஆய்வாளர் தலைமையில் கொசுப்புழு இனப்பெருக்கத்தை ஒழிக்க 20 தற்காலிக களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நீர் தேக்க தொட்டிகள், குடங்கள், ட்ரம்கள் மற்றும் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் உள்புறத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரையும் கொசுப்புழு இருக்கும் தண்ணீரை சாய்த்து விடுதல் மேலும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறோம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கடந்த 10 நாட்களாக இந்த விழிப்புணர்வு ஆய்வானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. வீட்டில் ஆய்வு மேற்கொள்ளும் போது யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. ரத்த சோதனை, அணுக்கள் குறைந்தால் அதற்கேற்றவாறு மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை மக்களுக்கு கூடுதலாக தெரிவித்து வருகிறோம்.
வந்த பின் எடுக்கப்படும் நடவடிக்கைகளை விட வரும் முன் காப்பதே சிறந்தது எனவே தான் விழிப்புணர்வு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
செய்தியாளர் : சினேகா விஜயன் - புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai