விவசாயம் சார்ந்த தொழில்களில் குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடியது பட்டுப்புழு உற்பத்தி தான். இந்தியாவில் பட்டுப்புழு வளர்ப்பு முக்கிய குடிசை தொழிலாக உள்ளது. இன்று உலக பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும், சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது. நம் நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 4ம் இடம் வகிக்கிறது. இந்நிலையில், இங்கு பட்டு நூல் தேவையும் அதிகளவில் உள்ளது.
பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது.
நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு நடைபெற்று வருகிறது. அதில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பட்டு புழு வளர்ப்பில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமம் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி 15 வருடங்களுக்கு மேலாக இந்த பட்டு புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து விஜயலட்சுமி பேசியபோது, “அரசாங்கத்தில் இருந்து 2 நிலை வளர்க்கப்பட்ட புழு எங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் பின்னர் 4 நிலை வளர்ச்சிக்கு பிறகு தோலுரிப்பு என்ற பருவம் நடக்கிறது. இந்த தோலுரிப்பு நிலைக்கு பின் விஜிதா என்ற பவுடர் தூவப்படுகிறது. அதன் பின் 6 நாட்கள் 12 வேளை என்ற முறையில் மல்பெரி இழைகள் அளிக்கபட்டவுடன் பட்டுப்புழு வளர்ந்து தயாராகிவிடும். முழுதாக 23 நாட்களில் பட்டுப்புழு வளர்ந்து விடும். தயாரான நிலையில் உள்ள பட்டு புழு கூடு அரசின் சார்பில் மாவட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருகிறோம். மேலும் 1 ஏக்கருக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இந்த பட்டு புழு வளர்ப்பில் லாபம் கிடைக்கும். இந்த பட்டுப்புழு வளர்ப்பிற்கு குளிர்ந்த நிலையான இடம் அவசியம். மேலும் வழங்கப்படும் உணவின் தரமும் முக்கியம். காலை மற்றும் மாலை வேளைகளில் இதற்கு இழைகள் இடப்படும். நோய் தாக்குதலுக்கு விஜிதா போன்ற பவுடர்கள் இட வேண்டும்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Pudukkottai