முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் ஊர்கள் தெரியுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் ஊர்கள் தெரியுமா?

மின் தடை

மின் தடை

Pudukkottai power cut Areas | புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) அன்னவாசல், இதுப்பூர், பாக்குடி, விராலிமலை, வடுகப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய் கிழமை ( நவம்பர் 8) அன்னவாசல், இதுப்பூர், பாக்குடி, விராலிமலை, வடுகப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி துணைமின் நிலையங்களில், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின் தடை ஏற்படுகிறது. இந்த தகவலை இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல், அன்னவாசல் பேருராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.

விராலிமலை, வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விராலிமலை நகர்பகுதி, கோமங்கலம், கல்குடி, பொருவாய், நம்பம்பட்டி, ராஜாளிபட்டி, பொய்யாமணி, செட்டியபட்டி, தேன்கனியூர், கொடும்பாளூர், மாதுராபட்டி, ராமகவுண்டம்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பாவயல், வடுகப்பட்டியில் உள்ள அனைத்து கம்பெனிகள், வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai