Home /pudukkottai /

புதுக்கோட்டையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

புதுக்கோட்டையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

மின் தடை அறிவிப்பு

மின் தடை அறிவிப்பு

pudukottai: புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருப்பதால் ,இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொந்த செலவில் நர்சரி.. நேரடியாக சென்று மரங்களை நட்டு பராமரித்து புதுக்கோட்டையை பசுமையாக்கி வரும் அதிசய மனிதர்..!!

மின்தடை ஏற்படும் பகுதிகள்: புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி,  சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவாரயன்பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர்குடிகாடு, ஆத்தரங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, கீராத்தூர், பருக்கைவிடுதி, குளத்தூர், மூக்கப்புடையான்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arunkumar A
First published:

Tags: Local News, Powercut, Pudukottai, Tamilnadu

அடுத்த செய்தி