முகப்பு /புதுக்கோட்டை /

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? 

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? 

X
விராலிமலை

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில்

Viralimalai Meikkannudayal Amman Temple : விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பணம் மற்றும் நகை எண்ணப்பட்டது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட கோவில்களை சேர்ந்த விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படும் இக்கோயிலில் வருடத்தின் அத்தனை மாதங்களிலும் விழாக்கள் நடைபெறும்.

அதன்படி, மார்கழி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் முக்கிய விழாக்கள் நடைபெறும். மேலும் இக்கோவில் விமரிசையாக சித்திரை திருவிழாவும் நடைபெறும்.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில்

இதில் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, அம்மனுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள். மேலும் சாதாரணமான நாட்களிலும் பக்தர்கள் இந்த கோவிலில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இந்நிலையில், இக்கோவில் உண்டியல் திறந்து காணிக்கையாக வந்த பணம் எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 3 லட்சத்து 92 ஆயிரத்து 189 ரொக்கம் மற்றும் 5.8 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளி என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Pudukkottai