ஹோம் /புதுக்கோட்டை /

ரூ.1 லட்சம்... பசுமை சாம்பியன் விருது - புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு 

ரூ.1 லட்சம்... பசுமை சாம்பியன் விருது - புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு 

கவிதா ராமு ஐ.ஏ.ஏஸ்.

கவிதா ராமு ஐ.ஏ.ஏஸ்.

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான தகுதி மற்றும் விதிமுறைகள் குறித்த விவரங்களையும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

பசுமை சாம்பியன் விருதுக்கு தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 - வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

கீழ்க்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பேர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்ழசூல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூ ழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்டங்களில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் மாநிலம் முழுவதும் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும்.

Must Read : அடேங்கப்பா... ஆச்சரியப்படுத்தும் செஞ்சி கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க

இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்னும் கூடுதல் விவரங்கள் பெற புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை அணுகலாம்.

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Pudukkottai