ஹோம் /புதுக்கோட்டை /

‘கண்பார்வை தான் குறைவு.. திறமைக்கும் முயற்சிக்கும் குறை இல்லை...’ தன்னம்பிக்கையால் சாதித்துவரும் புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி

‘கண்பார்வை தான் குறைவு.. திறமைக்கும் முயற்சிக்கும் குறை இல்லை...’ தன்னம்பிக்கையால் சாதித்துவரும் புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை இளைஞர்

Pudukkottai News : கண்பார்வை குறைபாடு இருந்தும் நிழலாக தெரியும் தனது பார்வையை பயன்படுத்தி எலக்ட்ரானிக் பொருள் பழுது நீக்கிவரும் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் சங்கர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

கண்பார்வை குறைபாடு இருந்தும் நிழலாக தெரியும் தனது பார்வையை பயன்படுத்தி எலக்ட்ரானிக் பொருள் பழுது நீக்கிவரும் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் சங்கர். மாற்றுத்திறனாளியான சங்கர் நிழலாக தெரியும் தனது குறைந்த பார்வையை பயன்படுத்தி தொலைக்காட்சி, எப்எம் ரேடியோ, ஹோம் தியேட்டர், டிடிஎச் பிட்டிங் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பழுது நீக்கம் செய்தும், பிட்டிங் செய்தும் வருகிறார். 10ம் வகுப்பு வரை மட்டும் படித்த இளைஞர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் - மாரியாயி தம்பதிக்கு 3வது மகனாக பிறந்தவர் சங்கர். பிறந்தது முதல் பார்வை குறைபாடுடன் பிறந்த இவரை பெற்றோர்கள் பல மருத்துவர்களிடம் காண்பித்தும் பயன் இல்லை. இருப்பினும் நிழலாக தெரியும் பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு மணப்பாறையில் உள்ள அரசு பள்ளியில் 10வது வரை படித்துள்ளார். பாட்டு போட்டி, அறிவியல் தொடர்பான போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளார்.

5வது படிக்கும்போது இருந்தே, எலக்ட்ரானிக் பொருட்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் டிவி பழுது நீக்குவதில் கூடுதல் ஆர்வம் இருந்து வந்ததால் தனியார் ஒருவரிடம் சென்று சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். பிறகு வீட்டிலேயே திண்ணையில் வைத்து தொலைக்காட்சி பழுது நீக்கும் பணியோடு எலக்ட்ரானிக் சம்பந்தமான அனைத்து பொருட்களின் பழுதையும் நீக்கி தரும் தொழில் செய்து வந்துள்ளார். இதில் பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணி செய்யாமல் சேவையை மனத்தில் வைத்தே இதில் ஈடுபட்டு வருகிறேன் என்கிறார் சங்கர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்த போதிலும் இன்றளவும் பெரும்பாலான கிராமங்களில் உள்ள வீடுகளில் அன்று அரசு கொடுத்த இலவச கலைஞர் டிவிக்களே இன்று வரை பொழுதுபோக்கு மற்றும் உலக நடப்புகளை அறிந்து கொள்வதில் பயன்பாட்டில் இருக்கிறது. அந்த தொலைக்காட்சிகளை ரிப்பேர் செய்வதற்கு அதிக செலவிடுவதை தவிர்க்கும் பொருட்டு குறைவான செலவிலேயே ரிப்பேர் செய்து தருகிறேன் என்கிறார் பார்வை குறைபாடு உள்ள இளைஞர் சங்கர்.

First published:

Tags: Local News, Pudukkottai