ஹோம் /புதுக்கோட்டை /

பல்திறன் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள்... புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அசத்தல்...

பல்திறன் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள்... புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அசத்தல்...

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News : புதுக்கோட்டை மாவட்டத்தில்  மணல்மேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல்மேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் பாட்டுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மாறுவேட போட்டி, நடனப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

மாணவ மாணவிகள் இதில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் தங்களது கலை நிகழ்ச்சிக்கு ஏற்ப உடை அணிந்தும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

மாறுவேடப் போட்டி நடன போட்டி பாட்டு போட்டி போன்ற அனைத்து போட்டிகளிலும் முழு ஈடுபாட்டுடனும் குழந்தைகள் பங்கேற்றனர். வண்ண வண்ண ஆடைகள் மற்றும் அதற்கு ஏற்ப அலங்காரத்துடன் தங்கள் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் அரசாணை வெளியிடாதது தவறில்லை - சட்டதுறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

இதற்கு ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றோர்கள் என அனைவரும் குழந்தைகளை உற்சாகப்படுத்தி ஊக்குவித்தனர். மேலும் முழுமையாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக காட்சியளித்தது கலைத்திறன் நடைபெற்ற இடம்.

முதன்மை கல்வி அலுவலர் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பயிற்சி ஆசிரியர் ஏற்பாடு செய்தனர். ஊனமுற்றவர்கள் என்று ஒதுக்கி வைக்கும் நிலை மாறி தற்போது அவர்கள் பல திறமைகளை தன்னுள் அடக்கிய மாற்றுத்திறனாளிகள் என்பதை சமுதாயத்திற்கு இந்த குழந்தைகள் எடுத்துரைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர் என அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

புதுக்கோட்டை - சினேகா விஜயன்

First published:

Tags: Local News, Pudukkottai