புதுக்கோட்டையில் நடைபெற்ற வித்தியாசமான பொங்கல் விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மெய்வழிச்சாலையில் என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதம் துறந்து, சாதி துறந்து மனிதன் மனிதனாகவே சங்கமிக்க வேண்டும் என்ற கோட்பாட்டுடன் இயங்கும் பகுதி தான் இந்த மெய்வழிச்சாலை. சாதி, மத பேதமின்றி மெய் மதத்தைப் பிரதானமாகக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் ஓலைக் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். மெய்வழிச்சாலையில் சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம், பெளத்தம் உள்ளிட்ட மதங்களைச் சோ்ந்தவா்கள் இணைந்து ‘மறலி கை தீண்டா சாலை ஆண்டவா்கள்’ என்ற மெய் மதத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் தங்களது அடையாளமான வெள்ளைத் தலைப்பாகையுடன் வாழ்ந்து வருகின்றனா்.
ஆண்டுதோறும் போகிப் பண்டிகையன்று மெய்வழிச்சாலை மக்கள் இங்கு ஒன்று கூடுகிறார்கள். தொடர்ந்து வரும் பொங்கல் விழாவை மகிழ்ச்சிப் பொங்கலென்றும், அடுத்த நாளின் மாட்டுப் பொங்கலை செல்வப் பொங்கலென்றும் இவா்கள் கொண்டாடி மகிழ்கின்றனா்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள பொன்னரங்க தேவாலயத்தைச் சுற்றிலும் கரும்பு, மாவிலைத் தோரணங்கள், தென்னங்குருத்து, இளநீா் கொத்துகள் கொண்டு அலங்கரித்திருந்தனா்.
கொடிமரத்தைச் சுற்றிலும் வண்ணக் கோலங்களை இட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கூடியிருந்த பெண்கள் பொங்கல் வைத்து விழாவைத் தொடங்கினா்.தொடா்ந்து, பொங்கலுக்கு அடுத்த நாள் மாலை கும்மி, கோலாட்டத்துடன் வெகு விமர்சையாக மாட்டு பொங்கல் எனும் செல்வப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கும்மி கோலாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் மெய்வழிச்சாலை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal festival, Pudukkottai