புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில், பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோவிலை உடனடியாக சீரமைத்து, புதுப்பித்து குடமுழுக்கு நடத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ளது மங்களாம்பிகை உடனுறை அனந்தேஸ்வரமுடையார் திருக்கோவில். இந்த சிவன் கோவில் 700 ஆண்டுகளுக்கும் முந்தைய கோவில் என வரலாறு கூறுகிறது.
இக்கோவிலில் ஈசன், அம்பிகை மட்டுமின்றி துர்க்கை, கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளன. நூற்றாண்டுகளை கடந்த இந்தக் கோவிலை பல ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டதால் தற்போது கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலை சீரமைத்து புணரமைக்கும் பணிகளில் பக்தர்கள் பலரும் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கினர்..
ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அப்பணியினை செய்து முடிக்க முடியாமல் போனது.
மேலும் படிக்க: புதுக்கோட்டையில் ஒரு புதுமையான நர்சரி.. அப்படி என்ன ஸ்பெஷல்?
பல நூறு ஆண்டுகள் தொண்மையான இந்த ஆலயத்திற்கு உள்ளே நுழைய முடியாமல் பக்தர்கள் வசதிக்காக தற்போது சிலைகளை வளாகத்தின் உள்ளே சிறிய கூரை கொட்டகை ஒன்று அமைத்து அதன் உள்ளே வைத்து வழிபட்டு வருகின்றனர்.
பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் இங்கு வந்து வழிபட பெண்கள் உட்பட பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கோவில் இல்லா ஊரில் வாழ வேண்டாம் என்பது முன்னோரின் முதுமொழி ஆகும், ஆனால், ஊரில் இருக்கும் கோவிலை வழிபட முடியாமல் கறம்பக்குடி பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: முக்காலி மூலம் திருடனை கண்டறியும் கிராம மக்கள்.. புதுக்கோட்டையில் விநோதம்..
தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலை உடனடியாக புணரமைத்து குடமுழுக்கு செய்து பக்தர்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலமாக பக்தர்களால் புகழப்படும் இத்திருத்தலம் கறம்பக்குடி நகரின் மையப் பகுதியில் பெரிய கருப்பர் கோவில் அருகே அமைந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இக்கோவிலிற்கு புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணித்து சென்றடையலாம்.புதுக்கோட்டையில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தொன்மையான திருத்தலம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai