முகப்பு /புதுக்கோட்டை /

அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..

அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..

அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு

அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு

Pudukkottai News | புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலை கிராமத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் சாலை சக்கரபாணி வளர்க்கும் ராமு என்ற ஜல்லிக்கட்டுக்காளை இறந்தது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலை கிராமத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் சாலை சக்கரபாணி அவர்களின்21 வயதான ராமு என்கிற ஜல்லிக்கட்டுக்காளை இறந்தது. இதுகுறித்து சாலை சக்கரபாணியின் மகன் சாலை கனகராஜ் கூறியதாவது, “ராமு எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்தான். கடந்த 2008ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் பல களங்களில் கலந்து கொண்டு சிறப்பான காளையாக விளையாடி பெயர் எடுத்துக் கொடுத்ததவன்.

தேனி அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் ஜல்லிக்கட்டு, சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறை,கண்டிப்பட்டி, அமராவதிப்புதூர்,மஞ்சுவிரட்டுகளில் சிறந்தகாளையாக விளையாடி எங்கள் கிராமத்திற்க்கும்,எங்கள் மாவட்டத்திற்க்கும் பெயர் எடுத்துக் கொடுத்தவன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    ராமு புளிக்குளம் நாட்டினக்காளை வகையைச் சேர்ந்தது. மேலும் முதுமை அடைந்த பிறகும் வீட்டில் ஒரு குழந்தைப்போல் பார்த்துக் கொண்டோம். ராமு காளையின் இறப்பு எங்கள் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்த காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்தோம்” என்றனர்.

    First published:

    Tags: Local News, Pudukkottai