ஹோம் /புதுக்கோட்டை /

அழகிய கிராமங்களை தேடி தொடரும் பயணம்... இந்த வாரம் புதுக்கோட்டை கொடும்பாளூர் சத்திரம்...

அழகிய கிராமங்களை தேடி தொடரும் பயணம்... இந்த வாரம் புதுக்கோட்டை கொடும்பாளூர் சத்திரம்...

கொடும்பாளூர் சத்திரம்

கொடும்பாளூர் சத்திரம்

Pudukkottai District News : புதுக்கோட்டையில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தான் இந்த கொடும்பாளூர் சத்திரம் கிராமம். 

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பது கிராமங்கள் தான். கிராமங்களில் நவீனங்கள் புகுந்தாலும் எளிமையும், பழமையையும், அமைதியையும், அழகையும் இன்னும் அவை தொலைத்து விடவில்லை.

  பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள நமக்கு கிடைத்த தாய்மடி தான் கிராமங்கள். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை கண்முன் கொண்டு வரும் ஒரு சிறிய முயற்சி தான் நியூஸ் 18 உள்ளூர் செய்தியின் “அழகிய கிராமங்கள் தேடி தேடி தொடரும் பயணம்” என்ற தொகுப்பு. அந்தவகையில் இந்த வாரம் புதுக்கோட்டையில் இருக்கும் ராணி மங்கம்மாள் சத்திரம் குறித்து பார்க்கலாம்.

  புதுக்கோட்டையில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தான் இந்த கொடும்பாளூர் சத்திரம் கிராமம். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் வழிப்போக்கர்கள் உணவு அருந்துவதற்காக அரண்மனை போன்ற சத்திரத்தை கிபி 17ம் நூற்றாண்டில் அமைத்துள்ளார். அதனால் இந்த ஊர் ராணி மற்றும் அவர் அமைத்த சத்திரத்தின் பெயரால் “ராணி மங்கம்மாள் சத்திரம்” என்று அழைக்கப்பட்டது.

  கொடும்பாளூர் சத்திரம்

  இதையும் படிங்க : Pudukkottai | கஜா புயலில் சேதமடைந்த தெருவிளக்கை இன்னும் சரி செய்யவில்லை - சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

  ஆனால் பின்னர் கொடும்பலூரில் இருப்பதால் கொடும்பாளூர் சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கொடும்பாளூர் சத்திரத்தில் 400 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் வியாபாரம் தான். கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் இவர்கள் அவ்வப்போது விவசாய கூலி வேலைக்கும் செல்கின்றனர்.

  இந்த கொடும்பாளூர் சத்திரமானது திருச்சி - மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் ஒரு மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கொடும்பாளூர் சத்திரமானது சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் ஒரு சிறிய அங்காடி தெருவாக விளங்குகிறது. இங்கு காய்கறி கடை, பழங்கள், பூக்கள் மளிகை பொருட்கள் ஆகியவற்றில் தொடங்கி சுற்றியிருக்கும் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இந்த ஊரில் விற்பனை செய்யப்படுகிறது.

  இதனால் இந்த சத்திரமானது எப்போதும் எந்த நேரத்திலும் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இடமாக விளங்குகிறது. இந்த ஊரில் இருக்கு சத்திரம் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும். 1659 ஆண்டுகளில் மதுரையை ஆண்ட மன்னரான சொக்கநாத நாயக்கரின் மனைவி ராணி மங்கம்மாள். மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டபோதும் ராணி மங்கம்மாளின் ஆளுமையின் வடக்கு பகுதி திருச்சி மண்டலம் வரை அப்போது நீண்டிருந்துள்ளது.

  கொடும்பாளூர் சத்திரம்

  இந்நிலையில், மதுரையில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து மதுரைக்கும் சென்று வரும் வழிப்போக்கர்கள் இடையில் தங்கி உணவருந்தி ஓய்வெடுப்பதற்காக விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் கட்டப்பட்டது தான் இந்த ராணி மங்கம்மாள் சத்திரம்.

  பல்வேறு வேலைப்பாடுகளுடனும், கலைநயத்துடனும் கட்டப்பட்டுள்ள இந்த சத்தித்தின் உள்ளே சென்று பார்ப்பவர்களை பிரமிப்புக்குள்ளாக்குகிறது. அரண்மனைகளில் உள்ளது போன்று உள்பகுதி 32 தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் நடுவே கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டான கலைநயத்துடன் தூண்கள், வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

  அந்த கால கட்டிட கலைஞர்களின் கலை நயத்தை இவ்வேலைபாடுகள் அழகாக வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

  மன்னர் ஆட்சி மறைந்து மக்களாட்சி தொடங்கிய காலகட்டத்தில் ராணி மங்கம்மாள் சத்திரம் கல்வி கூடமாக மாற்றப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அங்கு நடுநிலை பள்ளி இயங்கி வந்துள்ளது.

  காலபோக்கில் புதிய பள்ளி வகுப்பறைகள் சத்திரத்தின் அருகே கட்டப்பட்டதால் சத்திரத்தில் இயங்கி வந்த பள்ளி மாற்றப்பட்டு சத்திரம் பூட்டிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல ஆண்டுகளாக பராமறிப்பின்றி பூட்டியே கிடப்பதால் மழை, வெயில் உள்ளிட்ட பருநிலை மாற்றத்தினால் கட்டிடம் சேதமடைந்து பூச்சுகள் பெயர்ந்து சிதிலமடைந்து வருகிறது.

  கொடும்பாளூர் சத்திரம்

  இதையும் படிங்க : புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம்.. ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பயிற்சி..!

  கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ராணி மங்கம்மாள் சத்திரத்தை மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு மராமத்து பணிகள் தொடங்கி கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் என்றும். இதனால் வருங்கால சந்ததியினர் வரலாற்றை அறிந்து கொள்ளமுடியும் என்பது தான் இந்த ஊர் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

  கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என்று தங்கள் கிராம மேம்பாட்டிற்கு ஏதும் கேட்காமல் புராதன கட்டிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இந்த கிராம மக்களின் சுயநலமில்லாத பன்பிற்காகவாவது இந்த சத்திரத்தை உடனடியாக புனரமைக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

  கொடும்பாளூர் சத்திரம்

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukkottai